Mohammed Shami: 'தினமும் 1 கிலோ மட்டன் இல்லையென்றால் முகமது ஷமியின் வேகம் குறையும்’: கிரிக்கெட் வீரர் பற்றி நண்பர் உரை
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Mohammed Shami: 'தினமும் 1 கிலோ மட்டன் இல்லையென்றால் முகமது ஷமியின் வேகம் குறையும்’: கிரிக்கெட் வீரர் பற்றி நண்பர் உரை

Mohammed Shami: 'தினமும் 1 கிலோ மட்டன் இல்லையென்றால் முகமது ஷமியின் வேகம் குறையும்’: கிரிக்கெட் வீரர் பற்றி நண்பர் உரை

Marimuthu M HT Tamil
Jul 27, 2024 12:09 PM IST

Mohammad Shami: தினமும் 1 கிலோ மட்டன் இல்லையென்றால் முகமது ஷமியின் வேகம் குறையும் என்று கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பற்றி அவரது நண்பர் உரை நிகழ்த்தியுள்ளார்.

Mohammed Shami: 'தினமும் 1 கிலோ மட்டன் இல்லையென்றால் முகமது ஷமியின் வேகம் குறையும்’: கிரிக்கெட் வீரர்  பற்றி நண்பர் உரை
Mohammed Shami: 'தினமும் 1 கிலோ மட்டன் இல்லையென்றால் முகமது ஷமியின் வேகம் குறையும்’: கிரிக்கெட் வீரர் பற்றி நண்பர் உரை

ஐபிஎல் 2024 மற்றும் டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பைத் தவறவிட்ட பிறகு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்ப கடுமையாகத் தயாராகி வருகிறார். 

முகமது ஷமியின் ஆட்டிறைச்சி காதல்:

இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் ஆட்டிறைச்சி மீதான காதல் குறித்து ஷமியின் நண்பர் உமேஷ் குமார் பேசியது வைரல் ஆகியிருக்கிறது. 

சுபங்கர் மிஸ்ராவின் யூடியூப் சேனலில் உரையாடிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் நண்பர் உமேஷ் குமார், ‘’ஷமியின் பந்துவீச்சு வேகம் தினமும் 1 கிலோ ஆட்டிறைச்சியை உட்கொள்ளாவிட்டால், மணிக்கு 15 கி.மீ. வரை குறையும்’’ என்று கூறினார்.

இது தொடர்பாக சுபங்கர் மிஸ்ராவின் ’அன்பிளக்டு’ நிகழ்ச்சியில் பேசிய ஷமியின் நண்பர் உமேஷ் குமார், ‘’முகமது ஷமியால் எல்லாவற்றையும் தாங்க முடியும். ஆனால், ஷமியால் மட்டன் இல்லாமல் வாழ முடியாது. வேண்டுமென்றால், ஒரு நாள் பொறுத்துக்கொள்வார். இரண்டாவது நாள் மட்டன் சாப்பிடமுடியாததால் அவர் கொந்தளிப்படைவதை நீங்கள் காண்பீர்கள். மூன்றாவது நாள் அவர் சோக நிலைக்குப் போய்விடுவார். முகமது ஷமி தினமும் 1 கிலோ மட்டன் சாப்பிடவில்லை என்றால், அவரது பந்துவீச்சு வேகம் 15 கி.மீ வரை குறையும்" என்று கூறியுள்ளார். 

‘’மூன்று போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியும் இடம் கிடைக்கவில்லை’’:ஷமி:

அதே நிகழ்ச்சியின்போது ஷமி நல்ல விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும் முக்கியப் போட்டிகளில் களத்தில் இல்லாதது குறித்து முகமது ஷமியின் நண்பர் உமேஷ் குமார் மனம்திறந்து பேசினார்.

இதுதொடர்பாக மிஸ்ராவிடம் முகமது ஷமி கூறியிருப்பதாவது, ‘’ “நான் ஆச்சரியப்படும் ஒரு விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு அணிக்கும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் தேவை. 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். இதுக்கு மேல என்கிட்ட என்ன எதிர்பார்க்கறாங்க?” என்பதுதான் அது!

 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தன்னை கைவிட்டதற்காக விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி மீது வேகப்பந்து வீச்சாளர் மறைமுகமாக விமர்சனங்களை வைத்திருந்தார். குறிப்பாக, 2019 உலகக் கோப்பையின் போது, இந்திய அணியை விராட் கோலி வழிநடத்தினார். ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தார். 

எப்போது கடைசியாக ஆடினார் முகமது ஷமி:

இதற்கிடையில், முகமது ஷமி கடைசியாக நவம்பர் 2023ஆம் ஆண்டு, அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடினார். அப்போட்டியில், இந்தியா தோல்வியடைந்தது.

2023 உலகக் கோப்பையில், ஷமி ஏழு போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சராசரியாக 10.70 வைத்துள்ளார். அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை எடுத்தார். அந்தத் தொடரில் தொடர்ச்சியாக ஒரு நான்கு விக்கெட்டுகளையும் மூன்றுமுறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

11 ஐந்து விக்கெட்டுகள் உட்பட 188 சர்வதேச போட்டிகளில் 448 விக்கெட்டுகளுடன், ஷமி நவீன கிரிக்கெட் சகாப்தத்தின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

பாதிப்பைத் தந்த தசைநார் காயம்:

இதற்கிடையே வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பிப்ரவரியில் அகில்லெஸ் தசைநார் காயத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) உடனான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் இந்தியா வென்ற ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2024 ஆகியவற்றில் விளையாடும் வாய்ப்பினைத் தவறவிட்டார்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.