U-19 Worldcup: யு-19 கிரிக்கெட் உலகக் கோப்பை 2024-ஐ தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றியது ஐசிசி
செவ்வாய்கிழமை கூடிய ஐசிசி வாரியத்தின் கூடி ஆலோசனை நடத்தியது. அதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2024 ஐ இலங்கை இனி நடத்தாது, இது இப்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நவம்பர் 21 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை கூடிய ஐசிசி வாரியம் கூடி ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) ஐ.சி.சி.யால் உறுப்பினர் என்ற முறையில் அதன் கடமைகளை மீறியதற்காக சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டது, அதாவது அதன் விவகாரங்களை தன்னாட்சி மற்றும் அரசாங்க தலையீடு இல்லாமல் நிர்வகிக்கத் தவறியதற்காக இந்த நடவடிக்கையை ஐசிசி எடுத்திருந்தது.
இதன்காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகளிர் U19 T20 உலகக் கோப்பையை நடத்திய அதே நாட்டிற்கு ஆடவர் U19 நிகழ்வும் மாற்றப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
ஜனவரியில் தொடங்கவுள்ள இந்தப் போட்டி, 15வது யு-19 உலகக் கோப்பை தொடர் ஆகும்.
ஐசிசி அண்டர்-19 கிரிக்கெட் உலகக் கோப்பை என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மூலம் தேசிய 19 வயதுக்குட்பட்ட அணிகளால் போட்டியிடப்படும் ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும்.
1988 ஆம் ஆண்டு முதன்முதலில் இளையோர் கிரிக்கெட் உலகக் கோப்பை கொண்டுவரப்பட்டது. 1998 ஆம் ஆண்டு வரை மீண்டும் அரங்கேறவில்லை. அதன்பின்னர், உலகக் கோப்பை ஐசிசியால் ஏற்பாடு செய்யப்பட்ட இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாக நடத்தப்படுகிறது. போட்டியின் முதல் எடிஷனில் எட்டு அணிகள் மட்டுமே இருந்தன, ஆனால் ஒவ்வொரு அடுத்த எடிஷனும் பதினாறு அணிகளை உள்ளடக்கியது. இந்தியா ஐந்து முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது, ஆஸ்திரேலியா மூன்று முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும், பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் தலா ஒரு முறையும் வென்றுள்ளன. நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா தற்போதைய சாம்பியனாக உள்ளது.
அதிகம் முறை இந்தியா தான் இந்தக் கோப்பையை வென்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்