மூளையதிர்ச்சி மாற்று வீரர் விதியில் அதிரடி மாற்றம்.. மேலும் பல புதுமைகள்! ஜூன் முதல் அமலுக்கு வரும் ஐசிசி புதிய விதிகள்
அடுத்த மாதம் முதல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன. எல்லைக் கோட்டில் கேட்சுகள், டிஆர்எஸ் மற்றும் பழைய பந்து தொடர்பான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள் சர்வதேச கிரிக்கெட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தலாம் என தெரிகிறது.

ஜூன் 1ஆம் முதல் சர்வதேச கிரிக்கெட்டில் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்பட உள்ளன. வெள்ளை பந்து மற்றும் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் பல விதிகள் மாற உள்ளன. இது ஆட்டத்தை இன்னும் உற்சாகமாக்கும் விதமாக இருக்கும் என்றே தெரிகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் பழைய பந்து பயன்படுத்தப்படுவது, மூளையதிர்ச்சி மாற்று விதி மற்றும் டிஆர்எஸ் தொடர்பாக சில புதிய முறைகளும் அமலுக்கு வர உள்ளன. எல்லைக் கோட்டில் எடுக்கப்பட்ட கேட்சுகள் தொடர்பான விதியிலும் ஒரு சிறிய மாற்றத்தை ஐசிசி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் மாறும் விதிகள்
இந்த விதி மாற்றம் குறித்த பிரபல கிரிக்கெட் செய்திகள் தொடர்பான இணையத்தளமான கிரிக்பஸின் அறிக்கையில், இப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் 50 ஓவர்கள் முழுவதும் இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படாது. கடந்த சில ஆண்டுகளாக, இரு முனைகளிலிருந்தும் புதிய பந்துகள் பயன்படுத்தப்பட்டன. அதன்படி 50 ஓவர்கள் வரை, 25 ஓவர்கள் வரை மட்டுமே பந்துகள் பழையதாக இருந்தன. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ரிவர்ஸ் ஸ்விங்குக்கு உதவவில்லை.