Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடர் அணிகள், அட்டவணை.. எங்கு பார்க்கலாம்.. முழு விவரம் இதோ
Champions Trophy Full Schedule 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராப் 2025 போட்டிகள் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற இருக்கும் நிலையில் இதில் பங்கேற்கும் 8 அணிகளின் மொத்த விவரம், லைவ் ஸ்டிரீமிங் உள்பட இதர விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்

கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. உலக அளவில் டாப் 8 இடங்களில் இருக்கும் அணிகளான ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பரிக்கா ஆகிய அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.
இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தினாலும், இந்தியா தகுதி பெற்று விளையாட நேரிட்டால் அந்த போட்டியானது துபாயில் வைத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டி பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கராச்சி நேஷனல் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறுகிறது.
போட்டி நடக்கும் முறை
இந்த தொடரில் குரூப் ஏ, குரூப் பி என இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் தங்கள் குரூப்களில் இடம்பிடித்திருக்கும் அணிகளுடன் ஒரு போட்டியில் மோதி கொள்ளும். இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதியில் பலப்பரிச்சை செய்யும். அரையிறுதி போட்டியை வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்
குரூப் ஏ: பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம்
குரூப் பி: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பரிக்கா, ஆப்கானிஸ்தான்
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் முழு விவரமும், அணிகளின் பயிற்சியாளர்கள் மற்றும் சிறந்த செயல்திறன்களையும் பார்க்கலாம்
இந்தியா
இரண்டு முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற அணியாக இந்தியா உள்ளது. கடைசியாக 2017இல் நடைபெற்ற தொடரில் பைனலிஸ்ட் ஆனது.
இந்தியா அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி
பயிற்சியாளர்: கவுதம் கம்பீர்
சிறந்த பெர்பார்மென்ஸ்: சாம்பியன்ஸ் (2002, 2013)
பாகிஸ்தான்
கடைசியாக 2017இல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற பாகிஸ்தான் நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது.
பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் அசாம், ஃபகார் ஜமான், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தயாப் தாஹிர், ஃபஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவூப், முகமது ஏ ஹஸ்னா, முகமது ஏ ஷாஃப்னா.
பயிற்சியாளர்: ஆகிப் ஜாவேத் (இடைக்கால பயிற்சியாளர்)
சிறந்த பெர்பார்மென்ஸ்: 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடர் சாம்பியன்
வங்கதேச அணி
நஸ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், முகமது மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் பர்ஸ்மன், ஹொஸ்கின் அஹமது, அகமது, தன்சிம் ஹசன் சாகிப், நஹித் ராணா
பயிற்சியாளர்: பில் சிம்மன்ஸ்
சிறந்த பெர்பார்மென்ஸ்: அரையிறுதி (2017)
நியூசிலாந்து அணி
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, கைல் ஜேமிசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ராச்சின் ரவீந்திரா, ஜேக்கப் டஃபி, நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங்
பயிற்சியாளர்: கேரி ஸ்டீட்
சிறந்த பெர்பார்மென்ஸ்: சாம்பியன்ஸ் (2000)
ஆப்கானிஸ்தான் அணி
சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணியாக இருந்து வரும் ஆப்கானிஸ்தான் முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் களமிறங்குகிறது
ஆப்கானிஸ்தான் அணி விவரம்: ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, இக்ராம் அலிகில், குல்பாடின் நைப், அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், நங்கைல், நங்கை ஃபரூக்கி, ஃபரித் மாலிக், நவீத் சத்ரான்
பயிற்சியாளர்: ஜொனாதன் ட்ராட்
இங்கிலாந்து அணி
ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், டாம் பான்டன், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷீத், ஜோ ரூட், சாகிப் மஹ்மூத், பில் சால்ட், மார்க் வுட்
பயிற்சியாளர்: பிரெண்டன் மெக்கல்லம்
சிறந்த பெர்பார்மென்ஸ்: இரண்டாம் இடம் (2004, 2013)
ஆஸ்திரேலிய அணி
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா
பயிற்சியாளர்: ஆண்ட்ரூ மெக்டொனால்ட்
சிறந்த செயல்திறன்: சாம்பியன்ஸ் (2006, 2009)
தென்னாப்பிரிக்கா அணி
டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்டன், ட்ரைஸ்ஸென் ஸ்டிப்ஸ், டப்ரைஸ் ஸ்டிப்ஸ், டப்ரைஸ் ஸ்டிப்ஸ், டப்ரைஸ் ஷாம்சி. போஷ்
பயிற்சியாளர்: ராப் வால்டர்
சிறந்த பெர்பார்மென்ஸ்: சாம்பியன்ஸ் (1998)
சாம்பியன்ஸ் டிராபி 2025 முழு அட்டவணை
- பிப்ரவரி 19 - பாகிஸ்தான் v நியூசிலாந்து (கராச்சி, பாகிஸ்தான்) மதியம் 2.30 மணி IST
- பிப்ரவரி 20 - வங்கதேசம் v இந்தியா (துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) மதியம் 2.30 மணி IST
- பிப்ரவரி 21 - ஆப்கானிஸ்தான் v தென்னாப்பிரிக்கா (கராச்சி) மதியம் 2.30 மணி IST
- பிப்ரவரி 22 - ஆஸ்திரேலியா v இங்கிலாந்து (லாகூர், பாகிஸ்தான்) மதியம் 2.30 மணி IST
- பிப்ரவரி 23 - பாகிஸ்தான் v இந்தியா (துபாய்) மதியம் 2.30 மணி IST
- பிப்ரவரி 24 - வங்கதேசம் v நியூசிலாந்து (ராவல்பிண்டி, பாகிஸ்தான்) மதியம் 2.30 மணி IST
- பிப்ரவரி 25 - ஆஸ்திரேலியா v தென்னாப்பிரிக்கா (ராவல்பிண்டி) மதியம் 2.30 மணி IST
- மார்ச் 4 - அரையிறுதி 1 (துபாய்) 2.30 PM IST
- மார்ச் 5 - அரையிறுதி 2 (லாகூர்) 2.30 PM IST
- மார்ச் 9 - இறுதி (லாகூர் / துபாய்) 2.30 PM IST
சாம்பியன்ஸ் டிராபி 2025 லைவ் ஸ்டிரீமிங்
இந்தியாவில், ஜியோஸ்டார் நெட்வொர்க் 2025 சாம்பியன்ஸ் டிராபியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளராக இருக்கும். முதல் முறையாக, போட்டி ஆங்கிலம், இந்தி, மராத்தி, ஹரியான்வி, பெங்காலி, போஜ்புரி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஒன்பது மொழிகள் உட்பட 16 ஊட்டங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
ஜியோஹாட்ஸ்டார் நான்கு மல்டி-கேம் ஊட்டங்களுடன் நேரடி ஒளிபரப்பை வழங்கும். தொலைக்காட்சியில், ஆங்கில ஊட்டத்துடன் கூடுதலாக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ்18 சேனல்களில் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் ஒளிபரப்பு கிடைக்கும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்