ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: கிங் இஸ் பேக்..சதத்துடன் பினிஷ் செய்த கோலி.. நாக்அவுட் ஆகிய பாகிஸ்தான்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: ஒரு நாள் போட்டிகளில் 51வது சதத்தை அடித்திருக்கும் விராட் கோலி, அதிக சதமடித்த வீரர்களின் சச்சின் டென்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். சேஸிங்கில் கோலி அடித்திருக்கும் 28வது சதமாகவும் இது அமைந்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராப் 2025 கிரிக்கெட் தொடரில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் ஆர்வமாக எதிர்பார்த்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி துபாயில் நடைபெற்றது. பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா சாவா என்று இருந்த இந்த ஆட்டத்தில் இந்தியா விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025இல் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.
இந்தியா சேஸிங்
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான், இந்தியா பவுலர்களின் பந்துவீச்சுக்கு எதிராக அதிரடியாக ரன் குவிக்க முடியாமல் திணறிய நிலையில் 49.4 ஓவரில் 241 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதைத்தொடர்ந்து சேஸிங்கில் களமிறங்கிய இந்தியா தொடக்கம் முதலே பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி நிலையில் 42.3 ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் 45 பந்துகள் மீதமிருக்க வெற்றியை பதிவு செய்ததது. அதிகபட்சமாக விராட் கோலி 100, ஷ்ரேயாஸ் ஐயர் 56, சுப்மன் கில் 46 ரன்கள் எடுத்தனர்.
பாகிஸ்தான் பவுலர்களில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.