India Won The Match : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோஹித் சர்மா 76 ரன்கள் விளாசி அசத்தினார். ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இந்திய அணி 2002 இல் இலங்கையுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது. அதன் பிறகு, 2013 இல் சாம்பியன் ஆகியிருந்தது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஃபைனல் மேட்ச்சில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. 252 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி இலக்கை எட்டி வெற்றி கண்டது. 6 விக்கெட் இழப்புக்கு 49 ஓவர்களில் 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.
இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் கேப்டன் ரோஹித் சர்மா இந்த மேட்ச்சில் பொறுப்புடன் விளையாடி அரை சதம் எடுத்தார். அவர் 3 சிக்ஸர்கள், 7 ஃபோர்ஸ் விளாசி அசத்தினார். 83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தபோது ரவீந்திரா பந்துவீச்சில் ஸடம்பிங் ஆனார்.
கில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி எதிர்பாராதவிதமாக 1 ரன்னில் எல்பிடபிள்யூ ஆனார். ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் அடிக்க நெருங்கிய நிலையில், சான்ட்னர் வீசிய பந்தில் கேட்ச் ஆகி நடையைக் கட்டினார். அவர் 62 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அக்சர் படேல் நிதானமாக செயல்பட்ட போதிலும் தூக்கி அடிக்க முயன்றபோது 29 ரன்களில் அவுட்டானார். கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடினர்.