ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்!
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : ‘கோப்பை யாருக்கு?’ இந்தியா - நியூசிலாந்து பைனல் ஸ்கோர் நேரலை!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்!

Updated Mar 09, 2025 10:15 PM ISTUpdated Mar 09, 2025 10:15 PM ISTHT Tamil
  • Share on Facebook
Updated Mar 09, 2025 10:15 PM IST

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. போட்டியின் அனைத்து விபரங்களும் நேரலையாக இந்த தளத்தில் பதிவு செய்யப்படும். தொலைக்காட்சி நேரலைக்கு இணையான , அதை விட அதிக முக்கியத்துவத்துடன் அப்டேட்ஸ் கிடைக்கும்.

Sun, 09 Mar 202504:45 PM IST

தொடர் நாயகன் விருது

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல்: தொடர் நாயகன் விருதை ரச்சின் ரவீந்திரா வென்றார்.

Sun, 09 Mar 202504:44 PM IST

ஆட்டநாயகன் விருது வென்றார் ரோஹித்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல்: ஆட்டநாயகன் விருதை வென்றார் கேப்டன் ரோஹித் சர்மா. இவர் 76 ரன்கள் விளாசினார்.

Sun, 09 Mar 202504:25 PM IST

3வது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல்: டீம் இந்தியா, 3வது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் ஆனது. ஏற்கனவே, 2002 இல் இலங்கையுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது. 2013 இல் வெற்றி பெற்றது. தற்போது ரோஹித் தலைமையில் வெற்றியை ருசித்துள்ளது.

வின்னிங் ஷாட் அடித்து மேட்ச்சை முடித்தார் ஜடேஜா. மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜடேஜா-கே.எல்.ராகுல்.
வின்னிங் ஷாட் அடித்து மேட்ச்சை முடித்தார் ஜடேஜா. மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜடேஜா-கே.எல்.ராகுல். (AFP)

Sun, 09 Mar 202504:18 PM IST

இந்தியா சாம்பியன்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல்:  நியூசிலாந்துக்கு எதிரான ஃபைனல் மேட்ச்சில் இந்திய அணி இலக்கை எட்டி சாம்பியன் ஆனது.

Sun, 09 Mar 202504:12 PM IST

ஹர்திக் பாண்டியா அவுட்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல்:  18 ரன்கள் எடுத்து ஹர்திக் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Sun, 09 Mar 202503:59 PM IST

45 ஓவர்கள் முடிவில்..

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல்: 45 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. 30 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க வேண்டும்.

Sun, 09 Mar 202503:43 PM IST

அக்சர் படேல் அவுட்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல்: முக்கியமான தருணத்தில் அக்சர் படேல் பந்தை தூக்கி அடிக்க முயன்றார். அது கேட்ச் ஆனது. பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் அக்சர். 29 ரன்கள் எடுத்தார் அக்சர். 

Sun, 09 Mar 202503:30 PM IST

ஸ்ரோயஸ் ஐயர் அவுட்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல்: ஸ்ரோயஸ் ஐயர் அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Sun, 09 Mar 202503:07 PM IST

150 ரன்களைக் கடந்தது இந்தியா

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல்: இந்திய அணி 33 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்துள்ளது.

பந்தை விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர்
பந்தை விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர் (AFP)

Sun, 09 Mar 202502:43 PM IST

ரோஹித் ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்தார்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : கேப்டன் ரோஹித் சர்மா ஸ்டம்ப்பிங் ஆனார். ரச்சின் ரவீந்திரா பந்தை தூக்கி அடிக்க முயன்றபோது ஆட்டமிழந்தார். 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Sun, 09 Mar 202502:34 PM IST

நிதானம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி வருகிறார். ரோஹித்தும் நிதானம் காட்டி வருகிறார். 23 ஓவர்கள் முடிவில் 117 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா.

Sun, 09 Mar 202502:21 PM IST

கில், கோலி அவுட்

சான்ட்னர் பந்துவீச்சில் சுப்மன் கில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கோலி, எல்பிடபிள்யூ ஆனார். கில் 31 ரன்கள் எடுத்திருந்தார். கோலி 1 ரன்னில் அவுட்டானார்.

Sun, 09 Mar 202502:01 PM IST

ரோஹித்-கில் வலிமையான பார்ட்னர்ஷிப்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல்: 15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 93 ரன்களை எடுத்துள்ளது. ரோஹித்-கில் நங்கூரமாய் நின்று விளையாடி வருகின்றனர்.

Sun, 09 Mar 202501:48 PM IST

11 ஓவர்கள் முடிவில் இந்தியா 65 ரன்கள்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல்: 11 ஓவர்கள் முடிவில் இந்தியா 65 ரன்கள் எடுத்துள்ளது. 

Sun, 09 Mar 202501:46 PM IST

ரோஹித் அரை சதம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல்: ரோஹித் சர்மா அரை சதம் விளாசினார். 41 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார். இது 58வது அரை சதம் ஆகும்.

Sun, 09 Mar 202501:37 PM IST

சிக்ஸர் மழை பொழிந்து வருகிறார் ரோஹித்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல்: சிக்ஸர் மழை பொழியும் ரோஹித். அதிரடியாக விளையாடி வருகிறார்.

ரோஹித் அதிரடி ஆட்டம்
ரோஹித் அதிரடி ஆட்டம் (AP)

Sun, 09 Mar 202501:09 PM IST

ரோஹித் அதிரடி தொடக்கம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : கேப்டன் ரோஹித்தும், கில்லும் விளையாடி வருகின்றனர். ரோஹித் சிக்ஸருடன் ரன் குவிப்பை தொடங்கினார். தற்போது அதிரடியாக விளையாடி வருகிறார்.

Sun, 09 Mar 202512:32 PM IST

நியூசிலாந்து 251 ரன்கள்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஃபைனல் மேட்ச்சில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. 252 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடவுள்ளது.

Sun, 09 Mar 202512:25 PM IST

கேப்டன் சான்ட்னர் ரன் அவுட்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேர: ஹார்திக் பாண்டியா வீசிய 49 வது ஓவரில் கடைசி பந்தில் ரன் அவுட்டானார் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர். அவர் 8 ரன் எடுத்தார்.

Sun, 09 Mar 202512:25 PM IST

அரை சதம் விளாசிய மிட்செல் அவுட்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025  பைனல் நேரல: அரை சதம் விளாசிய டேரில் மிட்செல் விக்கெட்டை கைப்பற்றினார் ஷமி. அவரது கேட்ச்சை ரோஹித் சர்மா பிடித்தார்.

Sun, 09 Mar 202512:01 PM IST

நியூசிலாந்து 200 ரன்கள் சேர்ப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை: நியூசிலாந்து அணி 200 ரன்களை எட்டியது. 5 விக்கெட் இழப்புக்கு அந்த அணி இந்த இலக்கை எட்டியது.

Sun, 09 Mar 202511:31 AM IST

வருண் சக்கரவர்த்திக்கு 2வது விக்கெட்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை:  கிளென் பிலிப்ஸை 34 ரன்கள் எடுத்திருந்தபோது போல்ட் ஆக்கினார் வருண் சக்கரவர்த்தி.

Sun, 09 Mar 202511:27 AM IST

மிட்செல் - பிலிப்ஸ் பார்ட்னர்ஷிப்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல்: டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களை கடந்துள்ளனர். நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை கடந்துள்ளது.

Sun, 09 Mar 202510:43 AM IST

ஜடேஜாவுக்கு விக்கெட்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : ஜடேஜா வீசிய பந்து எல்பிடபிள்யூ ஆனார் டாம் லேதம். 24 வது ஓவரின் முதல் பந்தை வீசியபோது இந்த விக்கெட் கிடைத்தது. நடுவர் அவுட் கொடுத்தபோதிலும், நியூசிலாந்து டிஆர்எஸ் சென்றது. ஆனாலும், மூன்றாவது நடுவர் அவுட் வழங்கினார்.

Sun, 09 Mar 202510:32 AM IST

20 ஓவர்களில் 100

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : 20 ஓவர்களில் 100 ரன்களை எடுத்தது நியூசிலாந்து அணி. 3 விக்கெட் இழப்புடன் தொடர்ந்து விளையாடி வருகிறது.

Sun, 09 Mar 202510:11 AM IST

15 ஓவர்களில் முடிவில்..

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : 15 ஓவர்கள் முடிவில் நியூசி., 83/3. 

Sun, 09 Mar 202510:03 AM IST

வில்லியம்சன் விக்கெட்டை தூக்கிய குல்தீப்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை :  கேன் வில்லியம்சன் விக்கெட்டை எடுத்தார் குல்தீப் யாதவ். 14 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் வில்லியம்சன். விக்கெட் கீப்பர் டாம் லாதம் அடுத்து இறங்கினார்.

Sun, 09 Mar 202509:59 AM IST

டேரில் மிட்செல் களமிறங்கினார்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : ரவீந்திராவைத் தொடர்ந்து டேரில் மிட்செல் களமிறங்கியுள்ளார்.

Sun, 09 Mar 202509:54 AM IST

ரவீந்திரா அவுட்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : பவர் பிளே முடிந்து 11 வது ஓவரின் முதல் பந்தை வீசினார் குல்தீப் யாதவ். முதல் பந்திலேயே போல்டு ஆனார் ரச்சின் ரவீந்திரா. அவர் 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார். 29வது பந்தில் ஆட்டமிழந்தார்.

Sun, 09 Mar 202509:52 AM IST

பவர் பிளே முடிவில் 69/1

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : முதல் 10 ஓவர்கள் முடிந்தது. பவர் பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்துள்ளது நியூசிலாந்து.

Sun, 09 Mar 202509:48 AM IST

களம் இறங்கினார் கேன் வில்லியம்சன்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : வில் யங் ஆட்டமிழந்ததை தொடர்ந்து கேன் வில்லியம்சன் களம் புகுந்தார். அவர் 1 பவுண்டரி விளாசினார். ரச்சினுடன் தோள் கொடுத்து வருகிறார்.

Sun, 09 Mar 202509:42 AM IST

இந்தியாவுக்கு முதல் விக்கெட் கிடைத்தது!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : சுழல் மன்னன் வருண் வீசிய 8வது ஓவரில் வில் யங் எல்பிடபிள்யூ ஆனார். அவர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Sun, 09 Mar 202509:41 AM IST

ரச்சின் கேட்ச்சை தவறவிட்ட ஐயர்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : ஸ்ரேயாஸ் ஐயருக்கு கைக்கு சென்ற ரச்சின் கேட்ச்சை தவறவிட்டார். வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தை தூக்கி அடித்தார் ரச்சின். அது கேட்ச்சுக்கு சென்றது. ஆனால், அதை தவறவிட்டார். ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Sun, 09 Mar 202509:39 AM IST

ரச்சின் எல்பிடபிள்யூ ஆனாரா?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : 8வது ஓவரின் முதல் பந்தை வீசினார் வருண் சக்கரவர்த்தி.  எல்பிடபிள்யூ கேட்டார். நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால், DRS இல் மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என்றார்.

Sun, 09 Mar 202509:33 AM IST

முகமது ஷமிக்கு கையில் காயம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : 7 வது ஓவரை வீசிய ஷமி கேட்ச் கேட்ச் பிடிக்க முயன்றபோது பந்து கையில் தாக்கி காயம் ஏற்பட்டது. இடது கையில் சற்று ரத்தம் வந்தது. உடனடியாக மருத்துவக் குழு வந்து முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Sun, 09 Mar 202509:32 AM IST

விக்கெட் இழப்பின்றி நியூசிலாந்து பேட்டிங்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : 6 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்தது.

Sun, 09 Mar 202509:05 AM IST

முதல் ஓவர் முடிவில்.. 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : நியூசிலாந்து ஓபனிங் பேட்ஸ்மேனாக வில் யங், ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினர். முதல் ஓவரை ஷமி வீசினார். 5 பந்துகளை டாட் பந்தாக வீசிய அவர், கடைசி பந்தில் பவுண்டரி கொடுத்தார். வில் யங், ஃபோர் விளாசினார்.

Sun, 09 Mar 202509:03 AM IST

இந்தியா - நியூசிலாந்து பிளேயிங் லெவன்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : 

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி

நியூசிலாந்து: வில் யங், ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), கைல் ஜேமிசன், வில்லியம் ஓரோர்க், நாதன் ஸ்மித்

Sun, 09 Mar 202508:52 AM IST

டாஸில் ராசியில்லாத கேப்டன்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை :ஒருநாள் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான டாஸ்களை இழந்ததற்கான மோசமான சாதனையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

Sun, 09 Mar 202509:03 AM IST

ரோஹித் சர்மா பே

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : "இரண்டாவது இடத்தில் பேட்டிங் செய்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, அது ஒரு நல்ல பிட்ச் - இதில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை - நாம் முதலில் பந்து வீச வேண்டும் & அவர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்" என்று ரோஹித் சர்மா கூறினார்.

Sun, 09 Mar 202508:56 AM IST

டாஸ் ரிப்போர்ட்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை :  இந்தியா vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மேட்ச்சில் டாஸ் போடப்பட்டது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

Sun, 09 Mar 202508:56 AM IST

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை :

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : இந்திய அணி வீரர்கள் விபரம் 

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல் ராகுல், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

Sun, 09 Mar 202507:52 AM IST

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : நியூசிலாந்து அணி வீரர்களின் விபரம்.  வில் யங், ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓ'ரூர்க்.

Sun, 09 Mar 202507:39 AM IST

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : போட்டி தொடங்கும் நேரம் 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : இந்திய நேரப்படி இன்று மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்கும். இந்த போட்டியை ஜியோஹாட்ஸ்டார் தளத்திலும் செயலிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும், பல்வேறு மொழிகளில் நீங்கள் நேரலையில் போட்டியை  கண்டு மகிழலாம்.

Sun, 09 Mar 202507:09 AM IST

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : நியூசிலாந்தும் இந்தியாவும் மோதிய போட்டிகள்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : இதுவரை நேருக்கு நேர் 119 ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதியுள்ளன. இதில், 61 மேட்ச்களில் இந்தியாவும், 50 மேட்ச்களில் நியூசிலாந்தும் ஜெயித்துள்ளன. ஒரு மேட்ச் சமன் ஆகியிருக்கிறது. 7 மேட்ச்களில் ரிசல்ட் இல்லை.

Sun, 09 Mar 202506:49 AM IST

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : பிட்ச் ரிப்போர்ட்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : துபாயில் சற்று நீளமான பவுண்டரிகளும் மெதுவான மேற்பரப்பும் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பதை சற்று கடினமாக்கியுள்ளன. இந்த மைதானத்தில் இந்திய அணி மொத்த ரன்களைத் துரத்த முடிந்தாலும், அது அவர்களுக்கு இன்னும் சவாலானது என்பதை நிரூபித்துள்ளது.

Sun, 09 Mar 202506:23 AM IST

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை :  நியூசிலாந்து சந்தித்த ஒரே தோல்வி!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : நியூசிலாந்து (NZ) அணியும் இந்தப் போட்டி முழுவதும் சிறந்த ஃபார்மில் உள்ளது. அவர்கள் தங்கள் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தினர். அவர்கள் இறுதிப் போட்டிக்கு நம்பிக்கையுடன் வருவார்கள் என்றாலும், இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவர்கள் சந்தித்த ஒரே தோல்வியும் அவர்களின் மனதில் இருக்கும்.

Sun, 09 Mar 202505:55 AM IST

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : இந்திய அணிக்கான மற்றொரு சவால்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : 2019 ODI உலகக் கோப்பை நாக் அவுட் ஆட்டத்தில் தோல்வியடைந்த மற்றொரு அணியை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், டீம் இந்தியா மற்றொரு சவாலை இன்று எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக, இந்திய அணி இதுவரை ஒரு ஐசிசி நாக் அவுட் போட்டியில் மட்டுமே நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளது.

Sun, 09 Mar 202505:37 AM IST

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றியது இந்தியா!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : இந்திய அணி தோல்வியடையாமல் இந்தத் தொடரில் அனைத்து மேட்ச்களிலும் ஜெயித்துள்ளது, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Sun, 09 Mar 202505:01 AM IST

இந்திய அணியில் மாற்றமா?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : கடந்த இரு போட்டிகளில் மாற்றம் எதுவும் செய்யாத இந்திய அணி, இன்று அதே அணி வீரர்களுடன் விளையாடுகிறதா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Sun, 09 Mar 202505:00 AM IST

போட்டி எவ்வாறு நடைபெறுகிறது?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : இன்றைய இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான பைனல் போட்டி, பகல் இரவு போட்டியாக இன்று நடைபெறுகிறது

Sun, 09 Mar 202504:59 AM IST

யாருக்கு கோப்பை?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் நேரலை : இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடைேயேயான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் போட்டி இன்று நடைபெறுகிறது.

HT Tamil

eMail