ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: நியூசிலாந்துக்கு அரையிறுதிக்கான நுழைவாயில்.. வங்கதேசத்துக்கு தப்பிபப்தற்கான ஒரே வழி
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: இன்று நடைபெற இருக்கும் போட்டி நியூசிலாந்து அணி அரையிறுதியில் நுழைவதற்கான நுழைவு வாயிலாக இருக்கின்றன. அதே சமயம் வங்கதேச அணி தொடரில் இருந்து வெளியேறாமல் தப்பிப்பதற்கான போட்டியாக உள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற இருக்கின்றன. இந்த போட்டியானது நியூசிலாந்து அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் போட்டியாக உள்ளது. அதேபோல் வங்கதேசம் அணியை பொறுத்தவரை தொடரில் தங்களது இருப்பை தக்க வைக்கும் போட்டியாக உள்ளது.
நியூசிலாந்து தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. வங்கதேசம் அணி தனது முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை தழுவியது. இருப்பினும் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
நல்ல பார்ம்
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் நல்ல பார்மில் உள்ளது. முதல் போட்டியில் வில் யங், டாம் லாதம் ஆகியோர் சதமடித்தனர். பவுலிங்கில் மேட் ஹென்றி, வில் ஓ'ரூர்க் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர். அத்துடன் சரியான காம்பினேஷன் கொண்ட அணியாக வலம் வருகிறது.