Rohit Sharma: டி20 இறுதிப்போட்டி..மனதில் ஏற்பட்ட வெறுமை, பீதியை கடந்து திருப்புமுனை ஏற்படுத்திய சம்பவம் - ரோஹித் பதில்
டி20 இறுதிப்போட்டியில் தென் ஆப்பரிக்காவுக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவை என இருந்தபோது மனதில் வெறுமை ஏற்பட்டது. இருப்பினும் பீதியை கடந்து திருப்புமுனை ஏற்படுத்திய சம்பவம் குறித்து ரோஹித் ஷர்மா விவரித்துள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை வென்று இந்தியா சாம்பியன் ஆனது. 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை, 13 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி கோப்பை என மிகவும் சிறப்பு மிக்க வெற்றியாக இது அமைந்தது.
இந்த வெற்றியை நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டமாக ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்ட நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய வீரர்கள் தங்களது விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளார்கள்.
இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவும், தனது மனைவி மற்றும் மகளுடன் விடுமுறையை கொண்டாட வெளிநாடு சென்றுள்ளார். இதையடுத்து டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பரிக்காவுக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவை என்று ஆட்டம் கிட்டத்தட்ட கைமீறி போயிருந்த நிலையில், சிறப்பான ஆட்டத்தால் கம்பேக் கொடுத்து கோப்பை தூக்கிய திக் திக் தருணத்தின் போது அணியினர் மனநிலை எப்படி இருந்தது என்பதை ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.