ஐபிஎல் 2025: இந்திய கிரிக்கெட் எதிர்காலமாக வைபவ் சூர்யவன்ஷி இருப்பார் என நம்புகிறேன்! அபிநவ் முகுந்த்
அதிரடியாக பேட் செய்யும் சூர்யவன்ஷி, பக்குவமான இன்னிங்ஸ் அருமையாக இருந்தது.14 வயதிலேயே இவர் 80 முதல் 90 மீட்டர் சிக்ஸர்கள் அடிக்கிறார். இந்திய கிரிக்கெட் எதிர்காலத்தின் அறிகுறியாக திகழ்கிறார் என்று அபிநவ் முகுந்த் பாராட்டியுள்ளார்

ஐபிஎல் 2025 தொடரின் 62வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி ராஜஸ்தான் அணிக்கு கடைசி லீக் போட்டியாக அமைந்த நிலையில், வெற்றியுடன் இந்த தொடரை முடித்துள்ளது.
ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 போட்டிகளில் 4 வெற்றி, 10 தோல்விகளை பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியை தொடர்ந்து நடந்த ஜியோ ஹாட்ஸ்டாரின் Match Centre Live நிகழ்ச்சியில் ஜியோஸ்டார் நிபுணர்களான வருண் ஆரோன், அபிநவ் முகுந்த் ஆகியோர் பேசினர்.
வருண் ஆரோன் பேசும்போது சென்னை சூப்பர் கிங்ஸைக் கொஞ்சம் தடுமாற வைத்தாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் நிதானமாக போட்டியை முடித்ததற்காக பாராட்டினார்
