HT Cricket SPL: புகழ்பெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் அதிக முறை அணியை வழிநடத்திய கேப்டன்கள்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ht Cricket Spl: புகழ்பெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் அதிக முறை அணியை வழிநடத்திய கேப்டன்கள்

HT Cricket SPL: புகழ்பெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் அதிக முறை அணியை வழிநடத்திய கேப்டன்கள்

Manigandan K T HT Tamil
Dec 09, 2024 08:47 AM IST

இந்த ஆண்டு கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் ஆஸி.,யும் ஜெயித்துள்ளன. இன்னும் 3 டெஸ்ட் ஆட்டங்கள் உள்ளன. முதல் டெஸ்டில் ஸ்டேன்ட்- இன் கேப்டனாக பும்ரா அணியை வழிநடத்தி வெற்றியைத் தேடித் தந்தார்.

ஆஸி., முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி, கங்குலி, தோனி
ஆஸி., முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி, கங்குலி, தோனி

இந்த ஆண்டு கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் ஆஸி.,யும் ஜெயித்துள்ளன. இன்னும் 3 டெஸ்ட் ஆட்டங்கள் உள்ளன. முதல் டெஸ்டில் ஸ்டேன்ட்- இன் கேப்டனாக பும்ரா அணியை வழிநடத்தி வெற்றியைத் தேடித் தந்தார். தனிப்பட்ட காரணங்களால் முதல் டெஸ்டில் விளையாட முடியாமல் போன கேப்டன் ரோஹித் சர்மா, 2வது டெஸ்டில் அணியை வழிநடத்தினார். இருப்பினும், துரதிருஷ்டவசமாக 3வது நாளிலேயே மேட்ச் முடிவுக்கு வந்தது.  இந்தத் தருணத்தில் இத்தொடரில் இரு அணிகளிலும் அதிக முறை கேப்டன்சி பணியை வகித்து அணியை வழிநடத்தியது யார் யார் என பார்ப்போம்.

சமீபத்திய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கேப்டனாக அதிக போட்டிகள் ஆடியவர் என்ற சாதனை முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வசம் உள்ளது. 2004 முதல் 2010 வரை 11 பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர்களுக்கு பாண்டிங் கேப்டனாக இருந்தார்.

எம்.எஸ்.தோனி

இந்திய தரப்பில், MS தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்தத் தொடரில் அதிக முறை கேப்டனாக பதவி வகித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இரு அணிகளையும் சேர்த்து பார்த்தால், முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியே அதிக முறை பார்டர்-கவாஸ்கர் டிராபியில் அணியை வழிநடத்தியுள்ளார். அவர் 2008 முதல் 2014 வரை 13 மேட்ச்களில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தியுள்ளார். இதில் 8 மேட்ச்களில் அணி ஜெயித்துள்ளது. 4இல் தோல்வியைத் தழுவியுள்ளது. ஒரு முறை டிரா ஆகியிருக்கிறது.

இவருக்கு அடுத்த இடத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளார். இவர் 2004 முதல் 2010 வரை மொத்தம் 11 மேட்ச்களில் கேப்டனாக ஆஸி., அணியை வழிநடத்தியிருக்கிறார். இதில் 2 மேட்ச்களில் அந்த அணி ஜெயித்துள்ளது. 6 மேட்ச்களில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. 3 முறை டிரா செய்துள்ளது. 

விராட் கோலி

இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் விராட் கோலி உள்ளார். இவர், 2014 முதல் 2020 வரை மொத்தம் 10 மேட்ச்களில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி உள்ளார். அதில், 3 மேட்ச்களில் வெற்றி, 4 இல் தோல்வி, 3 இல் டிரா செய்யப்பட்டிருக்கிறது.

இந்தப் பட்டியலில் அடுத்து இருப்பவர் ஆஸி., அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக். இவர் 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை மொத்தம் 10 மேட்ச்களில் இந்தத் தொடரில் அணியை நடத்தியுள்ளார். இதில் 5 இல் வெற்றியும், 3 இல் தோல்வியும், 2 முறை டிராவும் ஆகியிருக்கிறது.

சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, 2001 முதல் 2004 வரை பார்டகர்-கவாஸ்கர் தொடர்களில் 9 ஆட்டங்களில் இந்திய அணிக்கு தலைமைப் பொறுப்பு ஏற்று வழிநடத்தியிருக்கிறார். அதில், 3 இல் வெற்றி, 3 இல் தோல்வி, 3 இல் டிரா செய்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.