Team India: இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து விளையாடும் போட்டிகள் விபரம்.. நான்ஸ்டாப் கொண்டாட்டம்!
Team India: உலகக்கோப்பை போட்டிக்குப் பின் இலங்கை உடன் மோதியதைப் போல, இலங்கை சுற்றுப்பயணத்திற்குப் பின், அடுத்த ஆண்டு இங்கிலாந்து உடன் தான், இந்திய அணிக்கு ஒரு நாள் போட்டிகள் உள்ளன. அதுவும் 3 போட்டிகள் மட்டுமே.
இலங்கை சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை கைப்பற்றியிருந்தாலும், ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணி, படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் தொடர் சொதப்பல் காரணமாக, இந்திய அணி இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான ஃபார்மை சந்தித்தது. அடுத்த ஆண்டு சாம்பியன் டிராஃபி ஆடவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக, இந்திய அணி ஆடவிருக்கும் விளையாட்டு போட்டிகளின் விபரங்களை பார்க்கலாம்.
21 போட்டிகள்.. ஒரு சுற்றுப்பயணம்!
எண் | மாதம் | அணி | போட்டி | இடம் |
1 | செப்டம்பர் 19, 2024 | பங்களாதேஷ் | முதல் டெஸ்ட் | சென்னை |
2 | செப்டம்பர் 27, 2024 | பங்களாதேஷ் | இரண்டாவது டெஸ்ட் | கான்பூர் |
3 | அக்டோபர் 6, 2024 | பங்களாதேஷ் | முதல் டி20 | தரம்சாலா |
4 | அக்டோபர் 9, 2024 | பங்களாதேஷ் | இரண்டாவது டி20 | டில்லி |
5 | அக்டோபர் 12, 2024 | பங்களாதேஷ் | மூன்றாவது டி20 | ஐதராபாத் |
6 | அக்டோபர் 16, 2024 | நியூசிலாந்து | முதல் டெஸ்ட் | பெங்களூரு |
7 | அக்டோபர் 24, 2024 | நியூசிலாந்து | இரண்டாம் டெஸ்ட் | புனே |
8 | நவம்பர் 1, 2024 | நியூசிலாந்து | மூன்றாவது டெஸ்ட் | மும்பை |
9 | நவம்பர் 22, 2024 | ஆஸ்திரேலியா | முதல் டெஸ்ட் | பெர்த் |
10 | டிசம்பர் 6, 2024 | ஆஸ்திரேலியா | இரண்டாவது டெஸ்ட் | அடிலட் |
11 | டிசம்பர் 14, 2024 | ஆஸ்திரேலியா | மூன்றாவது டெஸ்ட் | ப்ரிஸ்பேன் |
12 | டிசம்பர் 26, 2024 | ஆஸ்திரேலியா | நான்காவது டெஸ்ட் | மெல்பஃர்ன் |
13 | ஜனவரி 3, 2025 | ஆஸ்திரேலியா | ஐந்தாவது டெஸ்ட் | சிட்னி |
14 | ஜனவரி 22, 2025 | இங்கிலாந்து | முதல் டி20 | சென்னை |
15 | ஜனவரி 25, 2025 | இங்கிலாந்து | இரண்டாவது டி20 | கொல்கத்தா |
16 | ஜனவரி 28, 2025 | இங்கிலாந்து | மூன்றாவது டி20 | ராஜ்கோட் |
17 | ஜனவரி 31, 2025 | இங்கிலாந்து | நான்காவது டி20 | புனே |
18 | பிப்ரவரி 2, 2025 | இங்கிலாந்து | ஐந்தாவது டி20 | மும்பை |
19 | பிப்ரவரி 6, 2025 | இங்கிலாந்து | முதல் ஒருநாள் போட்டி | நாக்பூர் |
20 | பிப்ரவரி 9, 2025 | இங்கிலாந்து | இரண்டாவது ஒருநாள் | கட்டாக் |
21 | பிப்ரவரி 12, 2025 | இங்கிலாந்து | மூன்றாவது ஒருநாள் | அகமதாபாத் |
ஒருநாள் போட்டி பயிற்சியில் பின்னடைவு
இந்திய அணி சாம்பியன் டிராபியை சந்திக்கும் முன், இங்கிலாந்துடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. அதாவது, உலகக்கோப்பை போட்டிக்குப் பின் இலங்கை உடன் மோதியதைப் போல, இலங்கை சுற்றுப்பயணத்திற்குப் பின், அடுத்த ஆண்டு இங்கிலாந்து உடன் தான், இந்திய அணிக்கு ஒரு நாள் போட்டிகள் உள்ளன. அதுவும் 3 போட்டிகள் மட்டுமே. சாம்பியன் டிராபி போட்டிக்கு முன் இந்தியா மிகக்குறைந்த அளவில் தான் ஒரு நாள் போட்டிகளை விளையாடப் போகிறது. இது ஒருவகையில், ஒருநாள் போட்டி மீதான இந்திய அணியின் பயிற்சிக்கு சரியான களமாக இல்லாமலும் இருக்கலாம். அதே நேரத்தில் அதிகமாக டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
மேலும் கிரிக்கெட் தொடர்பான அப்டேட் அறிய, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பக்கத்தை தொடரவும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்