வழிவிடாத வருண பகவான்.. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து, நாளை டாஸ் என அறிவிப்பு
பெங்களூருவில் பெய்த கனமழை இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்க இருந்த இந்தியா - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டது. நாளை காலை மழை இல்லை எனில் டாஸ் போடப்பட்டு முதல் டெஸ்ட் மேட்ச் தொடங்கப்படும்.
இத்தகவலை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் குறிப்பிட்டுள்ளது.
டெஸ்டின் முதல் நாள் வாஷ் அவுட் ஆன நிலையில், இந்த வாரம் அடுத்த சில நாட்களுக்கான கணிப்பும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா அதிசயமாக முடிவை கட்டாயப்படுத்த முடிந்தது, அதுவும் மழையால் தடைபட்டது, மேலும் போட்டியில் ஏதேனும் விளையாட முடிந்தால் நியூசிலாந்துக்கு எதிராக அவர்கள் இப்போது அதையே செய்ய வேண்டியிருக்கும்.