Hardik pandya: காயத்தால் ஆஸ்திரேலியா, தென் ஆப்பரிக்கா தொடரிலிருந்து விலகும் பாண்ட்யா! யார் கேப்டன்?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Hardik Pandya: காயத்தால் ஆஸ்திரேலியா, தென் ஆப்பரிக்கா தொடரிலிருந்து விலகும் பாண்ட்யா! யார் கேப்டன்?

Hardik pandya: காயத்தால் ஆஸ்திரேலியா, தென் ஆப்பரிக்கா தொடரிலிருந்து விலகும் பாண்ட்யா! யார் கேப்டன்?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 17, 2023 07:33 PM IST

உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார்.

உலகக் கோப்பை 2023 தொடரில் காயமடைந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா
உலகக் கோப்பை 2023 தொடரில் காயமடைந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (PTI)

இந்த உலகக் கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடி பாண்ட்யாவுக்கு ஒரேயொரு முறை மட்டும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதில் 11 ரன்கள் அடித்து நாட்அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். அனைத்து போட்டிகளிலும் பவுலிங் செய்த பாண்ட்யா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், கேட்ச் ஒன்றும் பிடித்துள்ளார்.

பாண்ட்யாவுக்கு காயத்தின் தீவிரம் அதிகரித்த நிலையில் உலகக் கோப்பை 2023 தொடரிலிருந்து விலகினார். இருப்பினும் இந்திய அணி குழுவிலிருந்து வெளியேறாமல் தொடர்ந்து அணிக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையடுத்து உலகக் கோப்பை தொடர் முடிந்த பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக ஒரு நாள், டி20 தொடர்களில் இந்தியா விளையாட உள்ளது. இந்த இரு தொடர்களிலிருந்தும் ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்கு ஏற்பட்டிருக்கும் கணுக்கால் காயம் குணமாவதற்கு குறைந்து, முழு பிட்னஸ் பெற்று விளையாடுவதற்கு குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடக்கவிருக்கும் டி20 தொடர், தென் ஆப்பிரிக்காவில் மூன்று ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகி உள்ளார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடர் வரும் 23ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

இந்த தொடர் முடிவடைந்த பின்னர் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்று, மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. ஹர்திக் பாண்ட்யா இல்லாத நிலையிலும், சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும்பட்சத்திலும் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.