Vini Maxwell: இந்திய ரசிகர்கள் வெறுக்கத்தக்க மெசேஜ்களை அனுப்புகின்றனர் - வினி மேக்ஸ்வெல் குற்றச்சாட்டு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவியும் தமிழருமான வினிராமன் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நிறைய சமூக வலைதள ட்ரோல்களுக்கு இலக்காகியுள்ளார்.
கடந்த 19ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடந்த கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியில், இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி மீது தங்களின் ஏமாற்றம் அல்லது விரக்தியை வெளிப்படுத்த பலர் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்தனர்.
ஆனால் சிலரோ, அதில் ஒரு படி மேலே போய், கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் இந்திய வம்சாவளி மனைவியை வசைபாடினர்.
அதற்கு வினிராமன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது,“வெறுக்கத்தக்க இழிவான மெசேஜ்கள் வந்துள்ளன. தரமான கம்பீரமான ஆளாக இருங்கள்..
இது சொல்லவேண்டுமா என நான் முதலில் நம்பவில்லை. ஆனால் இதைச் சொல்ல எனக்குத் தேவை இருக்கிறது. நீங்கள் இந்தியனாக இருந்தால், உங்கள் பிறந்த நாட்டை ஆதரிக்கலாம்.
நீங்கள் எங்கு வளர்ந்தீர்கள், மிக முக்கியமாக உங்கள் கணவர் அணி, உங்களது குழந்தையின் தந்தையின் அணி எங்கு விளையாடுகிறது அதற்கு தான் ஆதரவு தரவேண்டும்.
உடம்பை குளிர்ச்சிப்படுத்தும் மாத்திரையை எடுத்துக்கொண்டு, மேலும் அந்த சீற்றத்தை மிக முக்கியமான உலகப் பிரச்சினைகளை நோக்கி செலுத்துங்கள்” என்று அவர் எழுதியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் தமிழச்சியுமான மருந்தாளுநர் வினி ராமன், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தனது மகனுடன் போட்டியைப் பார்த்தார். பின்னர் அதுகுறித்த காட்சியைப் பகிர்ந்தார்.
அப்போது ட்ரோல்கள் வரவே, அதற்கு ஒரு தனி விளக்கமும் கொடுத்து பதிவிட்டுள்ளார், வினி ராமன்.
வினி ராமனின் சமூக ஊடகப் பதிவுக்கு கலவையான விமர்சனங்கள் வரத் துவங்கின.
இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், "இன்று மகிழ்ச்சியாக இருப்பவர் இந்தியர் மட்டுமே" என்று கூறினார்.
மற்றொருவர்,“நீங்கள் இந்தியர் மற்றும் ஆஸ்திரேலியரை ஆதரிக்கிறீர்களா??? ஏன்??.. அட்லீஸ்ட் இந்திய டீம் நன்றாக விளையாடியதை குறிப்பிட்டு பதிவிட்டிருக்கலாம்” என்று மற்றொருவர் வலியுறுத்தினார்.
"நன்றி மீண்டும் வராதே," என மூன்றாவது ஒருநபர் வினிராமனிடம் வலியுறுத்தினார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லும், இந்திய வம்சாவளி தமிழச்சியான வினி ராமனும் காதலித்து மார்ச் 2022 -ல் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு முதல் குழந்தை பிறந்தது. இருவரும் கிறிஸ்தவ சடங்குகள் மற்றும் பாரம்பரிய தமிழ் பாணியில் திருமணத்தைச் செய்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து ஐபிஎல்லில் அவர் விளையாண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு பெரிய வரவேற்பினை ஏற்பாடு செய்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.