Glenn Maxwell: சிஎஸ்கே போட்டியில் மேக்ஸ்வெல் செய்த செயல்.. அபராதம் விதித்த பிசிசிஐ! பின்னணி என்ன?
Glenn Maxwell Fined: ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக பஞ்சாப் கிங்ஸ் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் விதிக்கப்பட்டது.

சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக, பஞ்சாப் கிங்ஸ் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் 2025 புள்ளி பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது. அதே நேரத்தில் இந்த சீசனில் நான்காவது தொடர்ச்சியான தோல்வியை பெற்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒன்பதாவது இடத்தில் உள்ளது
மேக்ஸ்வெல்லுக்கு அபராதம்
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக மேக்ஸ்வெல்லுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் ஒரு குறைபாடு புள்ளி வழங்கப்பட்டது. "கிளென் மேக்ஸ்வெல் பிரிவு 2.2 இன் (போட்டியின் போது சாதனங்களை சேதப்படுத்துதள் மற்றும் சாதனங்களை துஷ்பிரயோகம் செய்தல்) கீழ் லெவல் 1 குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் போட்டி நடுவரின் அனுமதியை ஏற்றுக்கொண்டார்.