GGW vs UPW Preview: குஜராத் ஜெயண்ட்ஸ் vs யு.பி. வாரியர்ஸ் மகளிர் அணி இன்று மோதல்.. மேலும் விவரம் உள்ளே
GGW vs UPW Preview: WPL 2025 இன் 3வது போட்டியும் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது, இந்த மைதானத்தின் மேற்பரப்பு பேட்டிங் செய்பவர்களுக்கு நன்றாக இருந்து வருகிறது.

GGW vs UPW Preview: குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL 2025) 3வது ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணி யுபி வாரியர்ஸ் மகளிர் அணியை எதிர்கொள்கிறது.
கடந்த சீசனில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி, 2025 WPL-ல் சிறப்பான தொடக்கத்தை எதிர்பார்த்தது. ஆனால், முதல் மேட்ச்சில் ஆர்சிபி மகளிர் அணியிடம் தோல்வி அடைந்தது. பெத் மூனி மற்றும் கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் அரைசதம் அடித்ததால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 201/5 என்ற அபாரமான ஸ்கோரை குவித்தது. பதிலுக்கு, நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை எளிதாக எட்டியது.
இன்று தனது இரண்டாவது ஆட்டத்தை குஜராத் ஜெயண்ட்ஸ் விளையாடவுள்ளது. இதற்கிடையில், யுபி வாரியர்ஸ் அணி ஞாயிற்றுக்கிழமை புதிய கேப்டன் தீப்தி சர்மா தலைமையில் தனது கேமைத் தொடங்கும். 2024 ஆம் ஆண்டில், யு.பி. வாரியர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருந்தது. அவர்கள் விளையாடிய எட்டு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று ஐந்தில் தோல்வியடைந்தது. தீப்தி தலைமையிலான அணி மன உறுதியை அதிகரிக்கும் வெற்றியுடன் தொடங்க முயற்சிக்கும்.
பிட்ச் ரிப்போர்ட்
WPL 2025 இன் 3வது போட்டியும் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது, இந்த மைதானத்தின் மேற்பரப்பு பேட்டிங் செய்பவர்களுக்கு நன்றாக இருந்து வருகிறது. பேட்டிங் செய்த வீராங்கனைகள் தங்கள் ரன்களை சிறப்பாக அடித்தனர். இன்றும் பிட்ச் முந்தைய போட்டிகளைப் போல இருந்தால், ரசிகர்கள் நிறைய ரன்களை எதிர்பார்க்கலாம். புதிய பந்து முதல் இரண்டு ஓவர்களுக்கு சுழலக்கூடும், ஆனால் அந்த கட்டத்திற்குப் பிறகு பேட்டிங் செய்பவர்களுக்கு சாதகமாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
இதுவரை நேருக்கு நேர்
இதுவரை 4 மேட்ச்களில் இரு அணிகளும் மோதியுள்ளது. குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணி 1 முறையும், யு.பி.வாரியர்ஸ் மகளிர் அணி 3 முறையும் ஜெயித்துள்ளது.
குஜராத், யு.பி.வாரியர்ஸ் உத்தேச பிளேயிங் லெவன்
குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் (GJ-W):
ஆஷ்லே கார்ட்னர் (கேப்டன்), லாரா வோல்வார்ட், ஹர்லீன் தியோல், டியான்ட்ரா டோட்டின், பெத் மூனி (விக்கெட் கீப்பர்), சிம்ரன் ஷேக், பிரியா மிஸ்ரா, சயாலி சத்கரே, தயாளன் ஹேமலதா, தனுஜா கன்வார், காஷ்வீ கௌதம்.
யு.பி. வாரியர்ஸ் மகளிர் (UP-W):
உமா செத்ரி (விக்கெட் கீப்பர்), சாமரி அதபத்து, விருந்தா தினேஷ், கிரண் நவ்கிரே, தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், பூனம் கெம்னார், தீப்தி ஷர்மா (கேப்டன்), சோஃபி எக்லெஸ்டோன், ராஜேஸ்வரி கயக்வாட், சைமா தாகோர்.
போட்டி எப்போது?
இந்த மேட்ச் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக், WPL என்றும் அழைக்கப்படுகிறது. மார்ச் 2023 இல் நடைபெற்ற முதல் சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணி பட்டத்தை வென்றது. போட்டிகள் மும்பை மற்றும் நவி மும்பையில் நடைபெற்றன, இதில் ஐந்து அணிகள் பங்கேற்றன. இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

டாபிக்ஸ்