GG women vs MI Women: ஐந்து பேர் மட்டும் இரட்டை இலக்க ரன்கள் - குஜராத் பேட்டர்கள் நன்கு கட்டுப்படுத்திய மும்பை பவுலர்கள்
GG women vs MI Women: குஜராத் ஜெயன்ட்ஸ் பேட்டர்களை நன்கு கட்டுப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் 120 ரன்களில் சுருட்டினர். குஜராத் அணியில் ஐந்து பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களை குவித்தனர்.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 5வது போட்டி யுபி வாரியர்ஸ் மகளிர் - மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையே வதோத்ராவில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் அணி 2 போட்டிகள் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. முதல் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக பெரிய ஸ்கோர் அடித்து தோல்வியை தழுவினாலும், அடுத்த போட்டியில் யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக கம்பேக் கொடுத்து வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி ஒரே போட்டியில் மட்டும் விளையாடி இருக்கும் நிலையில், அதில் தோல்வியை தழுவியுள்ளது. எனவே இந்த சீசனில் தனது வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்புடன் மும்பை இந்தியன்ஸ் மகளிர் போட்டியில் இந்த போட்டியில் களமிறங்குகிறது.
மும்பை பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் மகளிர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 32, காஷ்வி கௌதம் 20 ரன்கள் எடுத்தனர்.
