Gautham Gambir: ரோஹித், கோலியை விடுங்க! இவர்தான் Game Changerஆக இருப்பார் - கம்பீர் சொல்லும் வீரர் யார்?
ரோஹித் ஷர்மா, விராட் கோலியை காட்டிலும் கேம் சேஞ்சராக ஷ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என நம்புவதாக கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை 2023 தொடருக்கான இறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது. இதையடுத்து கோப்பை வெல்வதற்கான சவாலை எதிர்கொள்ள இரு அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் கில், ரோஹித், கோலி, ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், பவுலிங்கில் ஜடேஜா, குல்தீப், ஷமி, பும்ரா, சிராஜ் என அனைவரும் நல்ல பார்மில் உள்ளனர்.
இதேபோல் ஆஸ்திரேலியாவிலும் அனைத்து வீரர்களும் நல்ல நிலையில் இருப்பதுடன், எந்த நேரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வல்லமை கொண்ட வீரர்களாகவே இருந்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்த அணியின் மேட்ச் வின்னர் குறித்து முன்னாள் வீரர் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
உலகக் கோப்பை 2023 தொடரில் மிடில் ஆர்டரில் பேட் செய்து வரும் ஸ்ரேயாஸ் ஐயர், என்னை பொறுத்த வரை மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருந்து வருகிறார். ஆரம்பத்திலேயே காயத்தை சந்தித்த அவர் தனது இடத்துக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
சிறப்பாக பேட் செய்து வரும் அவர் நியூசிலாந்துக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் சதமடித்தது அபாரமானதாக அமைந்தது. அவர் தான் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்பின் அட்டாக்கான மேக்ஸ்வெல், ஸாம்பா ஆகியோரை சிறப்பாக எதிர்கொண்டு. எனவே, ரோஹித், கோலியை காட்டிலும் அவர்தான் இந்தியாவின் வெற்றிக்கான திறவுகோலாக இருப்பார் என நம்புகிறேன்.
இந்தியாவை போல் ஆஸ்திரேலியாவும் இரண்டு ஸ்பின்னர்களை கொண்டுள்ளது. இதையடுத்து ஸ்பின்னர்களை நன்கு அட்டாக் செய்யும் பேட்ஸ்மேனாக இருந்து வரும் ஷ்ரேயாஸ், மிடில் ஓவர்களில் கம்பீர் சொன்னது போல் பேட்டிங்கில் முக்கிய பங்கு வகிப்பார் என தெரிகிறது.
முதல் உலகக் கோப்பை தொடரில் களமிறங்கியிருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 526 ரன்கள் எடுத்துள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட் 113.11 ஆகவும், சராசரி 75.14 எனவும் உள்ளது. அத்துடன் கடைசி மூன்று போட்டிகளில் 50 ப்ளஸ் ஸ்கோர் எடுத்திருக்கும் ஷ்ரேயாஸ், ஒரு சதத்தையும் அடித்துள்ளார்.
டாபிக்ஸ்