HBD Robin Singh: தோனிக்கு முன் பினிஷராக இருந்தவர்..பீல்டிங்கில் வயதான வாலிபன் - இந்திய கிரிக்கெட்டின் ப்யூர் ஆல்ரவுண்டர்
HBD Robin Singh: தோனிக்கு முன் பினிஷராக இருந்தவர், பீல்டிங்கில் வயதான வாலிபன் போல் செயல்பட்டவர் 1990 காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியிந் ப்யூர் ஆல்ரவுண்டராக திகழ்ந்தார் ராபின் சிங்.

இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் 1989 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் விளையாடிய ப்யூர் ஆல்ரவண்டர் ராபின் சிங். பார்ப்பதற்கு மிகவும் அமைதியாகவும், களத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரராக இருந்து வந்த ராபின் சிங், கபில் தேவ் மற்றும் தோனி ஆகியோருக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் உயிரை கொடுத்து விளையாடி பல போட்டிகளில் இந்திய அணிக்காக வெற்றியை பெற்ற தந்த வீரராக திகழ்ந்தார்.
இடது கை பேட்ஸ்மேனாகவும், மிடில் ஓவர்களை வீசும் மித வேகப்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்த ராபின் சிங், இந்தியாவின் ஜாண்டி ரோட்ஸ் என சொல்லும் அளவில் பீல்டில் டைவ் அடித்தும், பறந்தும் பந்தை பிடிப்பதில் வல்லவராக திகழ்ந்தார்.
தமிழ் பூர்வீகம்
ராபின் சிங் பிறந்தது வெஸ்ட் இண்டீஸ் இருக்கும் டிரினிடாட் மற்றும் டோபாக்கோவாக இருந்தாலும் அவரது தந்தையான ராமநாரைன் தமிழ்நாட்டில் இருந்து அங்கு போய் செட்டில் ஆனவராகவும், தாயார் சாவித்ரி சிங் ராஜ்ஸ்தானை சேர்ந்தவராகவும் இருந்தார்கள்.