HT Sports Special: ஸ்விங் கிங் ஃபேனி டி வில்லியர்ஸ் தெரியுமா? ஆஸி., வீரர்கள் கள்ளத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டியவர்
தென்ஆப்பரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர், ஸ்விங் கிங் என்று அழைக்கப்பட்டவர் ஃபேனி டி வில்லியர்ஸ். டெஸ்ட் போட்டிகளில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்காக ஆஸ்திரேலியா வீரர்கள் மேற்கொண்ட கள்ளத்தனத்தை வெளிச்சம் போட்டிய காட்டிய புகழ் இவரையை சேரும்

ஆஸ்திரேலியாவின் கள்ளத்தனத்தை வெளிப்படுத்திய தென்ஆப்பரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஃபேனி டி வில்லியர்ஸ்
தென்ஆப்பரிக்கா அணிக்காக 1992 முதல் 1998 வரை டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாடிவர் ஃபேனி டி வில்லியர்ஸ். வேகப்பந்து வீச்சாளரான இவர், பந்தை நன்கு ஸ்விங் செய்வதிலும் வல்லவராக இருந்துள்ளார்.
முதன் முதலில் தென்ஆப்பரிக்காவுக்காக ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய இவர், பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்நிய மண் டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். முதல் தொடரிலேயே சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக விளையாடி ஒரு போட்டியில் அணியின் வெற்றிக்கு முழுமையான பங்களிப்பை அளித்தார்.
சிட்னி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு வெறும் 117 ரன்களே இலக்கை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தனது அற்புதமான பவுலிங்கால் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்ஆப்பரிக்கா அணியை 5 ரன்களில் வெற்றி பெற வைத்தார்.