‘இந்திய அணியை எப்போதும் தோற்கடிக்க முடியாத அணியாக மாற்றுவேன்’: பாட்காஸ்டில் யுவராஜ் சிங் தந்தை பேச்சு
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தருண் கோலியுடனான சமீபத்திய பாட்காஸ்டின் போது யோக்ராஜ் சிங் இவ்வாறு தெரிவித்தார்.

‘இந்திய அணியை எப்போதும் தோற்கடிக்க முடியாத அணியாக மாற்றுவேன்’: யுவராஜ் சிங் தந்தை அறிவிப்பு
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், அதிரடி வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங்கிடம் நீங்கள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர், ‘இந்திய அணியை எப்போதும் தோற்கடிக்க முடியாத அணியாக மாற்றுவேன்’ என்று கூறினார்.
மேலும் அணியின் இரண்டு மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை பாதுகாத்து ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தருண் கோலியுடனான சமீபத்திய போட்காஸ்டின் போது யோக்ராஜ் இவ்வாறு தெரிவித்தார்.