Sangakkara: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இருக்கா?-சங்ககாரா பதில்
Sangakkara: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் சோர்வாக இருந்ததும் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் சங்கக்காரா தெரிவித்தார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கிறாரா இல்லையா எனவும் தெரிவித்தார்.

Sangakkara: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இருக்கா?-சங்ககாரா பதில் (PTI Photo) (PTI)
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மோசமான ஆட்டத்திற்கு சோர்வே காரணம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஒன்பது போட்டிகளில் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதற்கான போட்டியில் உறுதியாக இருந்தது.
ஆனால், சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவியது, மேலும் ஒரு வாஷ் அவுட் டை ஆனது, இதனால் அந்த அணி மூன்றாவது இடத்தைப் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.