தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Team India Jersey: காவி, நீலம் இணைந்த இந்திய அணி டி20 உலகக் கோப்பை ஜெர்சி! “இது என்ன சர்ப் எக்சல் விளம்பரமா?” என Troll

Team India Jersey: காவி, நீலம் இணைந்த இந்திய அணி டி20 உலகக் கோப்பை ஜெர்சி! “இது என்ன சர்ப் எக்சல் விளம்பரமா?” என Troll

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 08, 2024 07:58 PM IST

டி20 உலகக் கோப்பை தொடருக்கான தங்களது ஜெர்சியை ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியா டி20 அணியின் ஜெர்சி காவியும், நீலமும் சேர்ந்த வண்ணத்தில் உள்ளது. 2019 உலகக் கோப்பை தொடரில் பயன்படுத்திய ஜெர்சியை போல் இது அமைந்துள்ளது.

காவி, நீலம் இணைந்த இந்திய அணி டி20 உலகக் கோப்பை ஜெர்சி
காவி, நீலம் இணைந்த இந்திய அணி டி20 உலகக் கோப்பை ஜெர்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த முறை டி20 உலகக் கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. அதன்படி நான்கு பிரிவுகளாகவும். ஒவ்வொரு பிரிவுகளிலும் 5 அணிகள் இடம்பிடிக்கின்றன. இந்தியா அணி குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்த பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய அணிகள் உள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் இதில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும் தங்களது அணிக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்தி வருகிறது.

காவி, நீலம் கலந்த இந்திய ஜெர்சி

அதன்படி, முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற சாம்பியன் அணியான இந்தியாவும், டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா அணியின் ஜெர்சி ஸ்பான்சரான அடிடாஸ் நிறுவனம் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் அணிய இருக்கும் ஜெர்சியை வெளியிட்டுள்ளது.

இதில் தற்போது இந்திய அணி அணியும் நீல நிறத்துடன், கை பகுதிகளில் காவி நிறமும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே நீலமும், காவியும் கலந்து இது அமைந்துள்ளது. அத்துடன் தோள்பட்டை பகுதிகளில் தேசிய கொடியை குறிக்கும் விதமாக மூவர்ண வண்ணமும் இடம்பிடித்துள்ளது.

தரம்சாலா மைதானத்தின் பின்புலத்தின் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா, ஸ்டார் வீரர் விராட் கோலி உள்பட முன்னணி வீரர்கள் இந்த புதிய ஜெர்சியை அணிந்திருக்கும் விதமாக அறிமுக விடியோ பகிரப்பட்டிருந்தது.

2019 உலகக் கோப்பை ஜெர்சி மாடல்

2019இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் போது இந்தியாவுக்கு இரண்டு ஜெர்சிகள் வழங்கப்பட்டது. அப்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது இரண்டாவது ஜெர்சியை அணிந்து இந்தியா விளையாடியது. இதில் ஜெர்சியின் முன்பகுதியில் நீல நிறமும், பின் பகுதியில் காவி நிறமும் இடம்பிடித்திருந்தன.

தற்போது அதே பாணியில் ஒத்து இந்த முறையும் அமைந்துள்ளது. 2019 உலகக் கோப்பை தொடரின்போது டார்க் நிற நீலமாக இருந்த நிலையில், இந்த முறை லைட் நிற நீலமாக இருப்பது மாற்றம் மிக்கதாக உள்ளது.

2023 ஒரு நாள் உலகக் கோப்பையில் இருந்து இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்சியை அணிந்து வருகின்றனர், இதையடுத்து தற்போது பயிற்சி ஜெர்சியும், இந்திய அணி போட்டியின்போது அணியும் நீல ஜெர்சியும், பயிற்சி ஜெர்சியும் இணைந்த கலவையாக தற்போது டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஜெர்சி உள்ளது.

ட்ரோல் செய்யும் ரசிகர்கள்

நீலம், காவி கலந்த ஜெர்சி இந்திய அணி முதல் முறையாக அணிந்து விளையாடவில்லை. ஆனால் தற்போது டி20 உலகக் கோப்பை தொடருக்கான ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இந்த புதிய ஜெர்சி குறித்து தங்களது விமர்சனங்களையும், அதிருப்தியையும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர் ஒருவர், "சர்ஃப் எக்செல் பேக்கிங்கால் ஈர்க்கப்பட்டு டீம் இந்தியா ஜெர்சி உள்ளது. பிசிசிஐ இன்னும் கொஞ்சம் செலுத்தி நல்ல வடிவமைப்பாளரை பணியமர்த்தி இருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அடிடாஸ் இதுபோன்று லோக்கலாக டிசைன் செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை என்று மற்றொரு பயனாளர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point