ENGW vs AUSW: பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அசத்திய ஆஸி., பவுலர்.. காயத்தில் இருந்து மீண்டு வந்த கேப்டன் சரவெடி ஆட்டம்
ENGW vs AUSW: சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஆஷஸ் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் அலிசா ஹீலி ஆஸி., அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.

ENGW vs AUSW: சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஆஷஸ் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி டாஸ் ஜெயித்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களை 43.1 ஓவர்களில் சேர்த்தது.
கேப்டன் ஹெதர் நைட் 39 ரன்களையும், வியாட் 38 ரன்களையும் விளாசினர்.
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸி., மகளிர் களமிறங்கியது.
மீண்டும் திரும்பிய அலிசா
முன்னதாக, ஆஸி., மகளிர் தரப்பில் ஆஷ்லி கார்ட்னர் 3 விக்கெட்டுகளையும், கிம் கார்த், அன்னபெல், அலானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டார்சி பிரவுன் 1 விக்கெட்டை எடுத்தார்.
ஆஸி., மகளிர் அணி சேஸிங்கில் பிரித்து மேய்ந்தது. தொடக்க வீராங்கனை லிட்ச்ஃபீல்டு 4 ரன்னில் அவுட்டானபோதிலும், கேப்டன் அலிசா நிதானமாக விளையாடினார். அவர் அரை சதம் விளாசி அதிரடி காட்டினார். மொத்தம் 70 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பெத் மூனி 28 ரன்களும், ஆஷ்லி 42 ரன்களும் விளாசினர்.
இவ்வாறாக 38.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களைக் குவித்து ஆஸி., முதல் வெற்றியை ருசித்தது.
பிளேயர் ஆஃப் தி மேட்ச்
இங்கிலாந்து தரப்பில் சோபி, லாரன் ஃபைலர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பிய ஆஷ்லி கார்ட்னர் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை தட்டிச் சென்றார்.
முன்னதாக, அக்டோபரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கோப்பை போட்டியின் போது ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா, தனது வலது காலில் காயமடைந்தார், அதைத் தொடர்ந்து மகளிர் பிக் பாஷ் லீக்கின் (டபிள்யூபிபிஎல்) போது முழங்கால் காயம் ஏற்பட்டது.
இதன் விளைவாக, அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் தவறவிட்டார் மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட கட்டுப்படுத்தப்பட்டார்.
ஆனால் மகளிர் ஆஷஸ் தொடருக்கு முன்னதாக, ஹீலி விக்கெட் கீப்பிங் கடமைகளை ஏற்க தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தி இருந்தார்.
"எல்லாம் அநேகமாக நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே முன்னேறியுள்ளது. நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். மிக முக்கியமாக, அங்கு சென்று அந்த வேலையைச் செய்ய முடியும் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் உணர்கிறேன். நாளை மீண்டும் களமிறங்குவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்" என்று ஹீலி ஐசிசி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார்.
ஆஸ்திரேலிய கேப்டன் இல்லாத நிலையில் பெத் மூனி விக்கெட் கீப்பிங் பணிகளை ஏற்றுக்கொண்டார். அவருக்குப் பதிலாக ஜார்ஜியா வோல் தொடக்க வீராங்கனையாக களமிறங்கி இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமானார்,
ஹீலி முழு சுற்றுப்பயணத்திற்கும் தனது உடற்தகுதி குறித்த கேள்விகளுக்கு நேர்மையாக பதிலளித்தார்.
மகளிர் ஆஷஸ் தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று டி 20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது.

டாபிக்ஸ்