WI vs SA Result: தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக தோல்வி! அரையிறுதி வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Wi Vs Sa Result: தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக தோல்வி! அரையிறுதி வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ்

WI vs SA Result: தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக தோல்வி! அரையிறுதி வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 24, 2024 11:46 AM IST

தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக தோல்வியை தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் யுஎஸ்ஏ அணியை வீழ்த்திய இங்கிலாந்து தனது அரையிறுதி வாய்ப்பை உறுதிபடுத்தியது.

தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக தோல்வியால் அரையிறுதி வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ்
தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக தோல்வியால் அரையிறுதி வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ் (AP)

வெஸ்ட் இண்டீஸ் சொதப்பல் பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 52, கெய்ல் மேயர்ஸ் 35 ரன்கள் அடித்தனர். மொத்தம் நான்கு பேட்ஸ்மேன்கள் மட்டும் இரட்டை இலக்கத்தில் ரன்கள் அடித்தனர்.

தென் ஆப்பரிக்கா பவுலர்களில் தப்ரைஸ் ஷம்சி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மார்கோ ஜான்சன், ஐடன் மார்க்ரம், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

தென் ஆப்பரிக்கா சேஸிங்

136 ரன்கள் என்கிற குறைவான இலக்கை சேஸ் செய்த தென் ஆப்பரிக்கா அணி இன்னிங்ஸில் போது மழை குறுக்கிட்டது. இதன் பின்னர் மீண்டும் தொடங்கிய போட்டியில் வெற்றி இலக்கு 17 ஓவர்களில் 124 என மாற்றப்பட்டது.

இதையடுத்து 16.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்த தென் ஆப்பரிக்கா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.

தென்  ஆப்பரிக்கா அணியில் அதிகபட்சமாக ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 29, ஹென்ரிச் கிளாசன் 22, மார்கோ ஜான்சன் 21 ரன்கள்  அடித்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோஸ்டன் சேஸ் 3, அல்சாரி ஜோசப் மற்றும் ஆன்ட்ரே ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ்

சூப்பர் 8 சுற்றில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தென் ஆப்பரிக்கா அணி முதல் இடத்திலும், 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த இரு அணிகளும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகளில் ஒரே வெற்றியை மட்டும் பெற்றிருக்கும் நிலையில், அரையிறுதி வாய்ப்பை இழந்தது. தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லலாம் என்று இருந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியை தழுவியது.

பேட்டிங். பவுலிங்கில் சேஸ் அபாரம்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் பார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்களாக திகழ்ந்த ஷாய் ஹோப் 0, நிக்கோலஸ் பூரான் 1 ரன் என அவுட்டானார்கள். நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய சேஸ் நிதானமாக பேட் செய்து அரைசதமடித்தார். 42 பந்துகளில் 52 அடித்த ஹோப் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்தார்.

இதன் பின் பவுலிங்கில் கலக்கிய சேஸ் 3 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருப்பினும் இவரது இந்த சிறப்பான ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு கைகொடுக்காமல் போனது.

யுஎஸ்ஏ வீழ்த்தி அரையிறுதியில் இங்கிலாந்து

முன்னதாக, நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து - யுஎஸ்ஏ அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த யுஎஸ்ஏ 115 ரன்கள் எடுத்தது.

இந்த ரன்கள் இங்கிலாந்து 17.1 ஓவர்களில் சேஸ் செய்தால் அரையிறுதி வாய்ப்பை பெறலாம் என்று இருந்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக பேட் செய்து வெற்றி இலக்கை 9.4 ஓவரில் சேஸ் செய்தது. அத்துடன் அரையிறுதி வாய்ப்பை பெற்றது.

இங்கிலாந்து வெற்றி பெற்றதால், வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பரிக்கா போட்டியில் தோல்வி அடையும் அணி வெளியேறும் என்று நிலைமை மாறியது. இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக இது அமைந்திருந்த நிலையில் தென் ஆப்பரிக்கா வெற்றியுடன் அரையிறுதிக்கு சென்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.