Dinesh Karthik: இரவு நேரத்தில் அசைந்து சென்ற உருவம்..பயங்கரமான உணர்வு - தென் ஆப்பரிக்காவில் டிகேவின் அமானுஷ்ய அனுபவம்
இரவு நேரத்தில் ஏதோ அசைந்து சென்ற பயங்கரமான உணர்வு அறையில் இருந்தபோது ஏற்பட்டது என தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணத்தின்போது தான் சந்தித்த அமானுஷ்ய அனுபவத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் பகிர்ந்துள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தென்னாப்பிரிக்காவில் 2013ஆம் ஆண்டு தனக்கு நேர்ந்த அமானுஷ்ய அனுபவங்களில் ஒன்றை விவரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில்,
அமானுஷ்ய உணர்வு
"ரெயின்போ நேஷனின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள சொகுசு விடுதியான சன் சிட்டியில் அணியினர் தங்கியிருந்தோம். அப்போது எனது அறையில் ஏதோ அசைந்து செல்வதை உணர்ந்தேன். ஆனால் நான் பார்த்தது என்னவென்று உறுதியாக தெரியவில்லை.
இரவில் நேரத்தில் அறையில் ஏதோ சங்கடமான மற்றும் வித்தியாசமான அசைவுகளை உணர்ந்தேன். ஆனால் என் வாழ்க்கையில் சந்தித்த மிகவும் பயங்கரமான அமானுஷ்ய உணர்வாக இருந்தது."
முத்தரப்பு தொடர்
2013இல் இந்தியா ஏ, தென் ஆப்பரிக்கா ஏ, ஆஸ்திரேலியா ஏ அணிகள் விளையாடிய முத்தரப்பு ஒரு நாள் தொடர் தென் ஆப்பரிக்காவில் நடைபெற்றது. சத்தேஷ்வர் புஜாரா தலைமையிலான இந்தியா ஏ அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது.
இந்த தொடரில் இந்தியா ஏ அணியில் ஓபனராக களமிறங்கிய ஷிகர் தவான் டாப் ஸ்கோரராக திகழ்ந்தார். அதேபோல் பவுலர்களில் ஷபாஸ் நதீம் சிறந்த பவுலராக ஜொலித்தார்.
தென்ஆப்பரிக்கா டி20 லீக்கில் தினேஷ் கார்த்திக்
சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் தினேஷ் கார்த்திக் எதிர்வரும் தென்ஆப்பரிக்கா டி20 லீக்கான SA20 தொடரில் பார்ஸ் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். இந்த தொடரின் அடுத்த சீசன் ஜனவரி 9ஆம் தேதி தொடங்குகிறது. ஓய்வுக்கு பின்னர் அவர் விளையாட இருக்கும் முதல் தொடராக இது அமையவுள்ளது.
இதுபற்றி தினேஷ் கார்த்திக் கூறியதாவது, "தென்னாப்பிரிக்காவுக்கு சென்று விளையாடியதில் எனக்கு பல இனிமையான நினைவுகள் உள்ளன. இந்த வாய்ப்பு வந்தபோது, மீண்டும் போட்டி கிரிக்கெட்டில் விளையாடுவது எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்பதால், என்னால் மறுக்க முடியவில்லை." என்றார்.
பிட்டான வீரர்
தினேஷ் கார்த்திக் தனது ஒட்டு மொத்த கிரிக்கெட் கேரியரிலும் மிகவும் பிட்டான வீரராக இருந்துள்ளார். மொத்தம் 17 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
மொத்தம் 180 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கும் தினேஷ் கார்த்திக், ஐபிஎல் போட்டிகளில் கடைசியாக ஆர்சிபி அணியில் விளையாடினார். தற்போது அந்த அணியின் வழிகாட்டி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டி20 போட்டிகளை பொறுத்தவரை சர்வதேசம் மற்றும் டி20 லீக் போட்டிகள் என மொத்தம் 401 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் மொத்த ஆறு அணிக்காக அவர் விளையாடியிருக்கிறார். இதன் மூலம் அதிக அணிக்காக விளையாடி வீரர்களில் ஒருவராக தினேஷ் கார்த்திக் திகழ்கிறார்.
இந்திய முதல் டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்த தினேஷ் கார்த்திக், கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்