"ஊக்கப்படுத்துகிறது.. மற்றபடி அவமதிக்கும் எண்ணம்.." நோட்புக் கொண்டாட்டம் ஏன்? திக்வேஷ் ரதி
இரண்டு முறை பிசிசிஐயின் தொடர்ச்சியான எச்சரிக்கைக்குப் பிறகு, முதல் முறையாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஸ்பின்னர் திக்வேஷ் ரதி, தனது நோட்புக் கொண்டாட்டம் குறித்து மெளனம் கலைத்ததாக அவரது சகோதரர் சன்னி விளக்கம் அளித்துள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக தனது அற்புதமான ஆட்டம் மற்றும் அவரது அச்சமற்ற அணுகுமுறையால் திக்வேஷ் ரதி ஐபிஎல் 2025 தொடரில் முக்கிய பவுலராக உருவெடுத்துள்ளார். ஆனால், இந்த சீசனில் பேட்ஸ்மேன்களை அவுட் செய்த பிறகு, அவர்களை வழியனுப்பும் விதமாக நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுரட்ட அவருக்கு பிசிசிஐ இரண்டு முறை அபராதம் விதித்தது. இருப்பினும், இந்திய வாரியத்தின் தொடர்ச்சியான எச்சரிக்கைக்குப் பிறகு முதல் முறையாக, எல்எஸ்ஜி புதுமுக வீரர் கொண்டாட்டம் குறித்து தனது மௌனத்தை உடைத்தார்.
திக்வேஷ் நோட்புக் கொண்டாட்டம்
பிரியான்ஷ் ஆர்யாவை வெளியேற்றிய பிறகு, லக்னோவில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் கெஸ்க்ரிக் வில்லியம்ஸ் பாணியில் 'நோட்புக்' கொண்டாட்டத்தை ரதி முதலில் வெளிப்படுத்தினார். அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமும் ஒரு தகுதிக் குறைப்புப் புள்ளியும் வழங்கப்பட்டது.