LSG vs DC Result: Mission Accomplished..!ரிஷப் பண்ட், மெக்குர்க் சம்பவம் - லக்னோவுக்கு எதிராக முதல் வெற்றி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Lsg Vs Dc Result: Mission Accomplished..!ரிஷப் பண்ட், மெக்குர்க் சம்பவம் - லக்னோவுக்கு எதிராக முதல் வெற்றி

LSG vs DC Result: Mission Accomplished..!ரிஷப் பண்ட், மெக்குர்க் சம்பவம் - லக்னோவுக்கு எதிராக முதல் வெற்றி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 13, 2024 12:52 AM IST

பிட்ச் தன்மை பற்றி கவலைப்படாமல் ஆஸ்திரேலியா இளம் வீரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ரிஷப் பண்ட் ஆகியோர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பவுலர்களுக்கு எதிரான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணிக்கு முக்கிய தேவையாக இருந்து வரும் வெற்றியை பெற்று தந்துள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் வெற்றி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் வெற்றி

லக்னோ அணியில் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவுக்கு பதிலாக அர்ஷத் கான் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் லலித் யாதவ், குமார் குஷாக்ராவுக்கு பதிலாக குல்தீப் யாதவ், முகேஷ் குமார் அணிக்கு திரும்பியுள்ளனர்.

லக்னோ பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ ஓவரில் விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக இளம் பேட்ஸ்மேன் ஆயுஷ் பதோனி 55 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக கேஎல் ராகுல் 39, குவன்டைன் டி காக் 19 ரன்கள் எடுத்தனர்.

டெல்லி கேபிடல்ஸ் பவுலிங்கில் அற்புதமாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கலீல் அகமது 2 விக்கெட்டுகள், இஷாந்த் ஷர்மா, முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

டெல்லி சேஸிங்

168 ரன்களை விரட்டிய டெல்லி கேபிடல்ஸ் 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த சீசனின் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக முதல் வெற்றியையும் பதிவு செய்ததது.

டெல்லி அணியில் இன்றைய போட்டியில் சேர்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் வீரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் முதல் ஐபிஎல் போட்டியிலேயே அரைசதமடித்து அதிகபட்சமாக 55 ரன்கள் அடித்தார்.

இவருக்கு அடுத்தபடியாக கேப்டன் ரிஷப் பண்ட் 41, ஓபனர் ப்ருத்வி ஷா 32 ரன்கள் அடித்தார்கள்.

லக்னோ பவுலர்களில் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். யஷ் தாக்கூர், நவீன் உல் ஹக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இந்த வெற்றியால் டெல்லி கேபிடல் ஒரு இடம் முன்னேறி 9வது இடத்துக்கு சென்றது.

மெக்குர்க் - பண்ட் பார்ட்னர்ஷிப்

டெல்லி கேபிடல்ஸ் ஓபனரான வார்னர் மற்றொரு சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8 ரன்னில் அவர் அவுட்டாகி வெளியேற, மற்றொரு ஓபனரான ப்ருத்வி ஷா கொஞ்சம் அதிரடியாக பேட் செய்தார். 22 பந்துகளில் 32 ரன்கள் குவித்த அவர் பிஷ்னோய் சுழலில் சிக்கினார்.

மூன்றாவது விக்கெட்டு அறிமுக வீரர் மெக்குர்க் - ரிஷப் பண்ட் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் இணைந்து மாறி மாறி லக்னோ பவுலர்களை வெளுத்து வாங்கினார். பிட்ச்சை பற்றி கவலைப்படாமல் பவுண்டரி, சிக்ஸர்களாக அடித்து துவம்சம் செய்தனர்.

இருவரும் 77 ரன்கள் சேர்த்த நிலையில், முதல் ஐபிஎல் போட்டியிலேயே அரைசதமடித்த மெக்குர்க் 35 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் தனது இன்னிங்ஸில் 5 சிக்ஸர், 2 பவுண்டரி அடித்தார்.

இவர் அவுட்டான பின்னர் சிறப்பாக பேட் செய்து 24 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து பண்ட் அவுட்டாகி நடையை கட்டினார்.

இருப்பினும் டெல்லி அணி வெற்றியை உறுதியான நிலையில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ். >ஷாய் ஹோப் ஆகியோர் இணைந்து ஆட்டத்தை பினிஷ் செய்தனர்.

டெல்லிக்கு முக்கிய தேவையாக இருந்து வெற்றி கிடைத்திருப்பதோடு, தொடர்ந்து இரண்டு சீசன்கள் எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் லக்னோவுக்கு எதிராக தோல்வியை பெற்று வந்த நிலையில், தற்போது முதல் முறையாக அந்த அணியை வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் ஒரே போட்டியில் இரண்டு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.