DCW vs MIW: WPL-ல் 4வது அரை சதம் விளாசிய மும்பை பிளேயர் ப்ரன்ட்.. டெல்லிக்கு 165 ரன்கள் இலக்கு
DCW vs MIW: 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் நிக்கி பிரசாத் மற்றும் ஸ்காட்லாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சாரா பிரைஸ் ஆகியோர் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அறிமுகமாகினர்.

DCW vs MIW: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் மெக் லானிங், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் மும்பை விளையாடியது. இந்த மேட்ச்சில் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களை சேர்த்தது. 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி விளையாடவுள்ளது. இந்த மேட்ச்சில் மும்பை வீராங்கனை ப்ரன்ட் டபிள்யூபிஎல் போட்டியில் 4வது அரை சதம் பதிவு செய்தார்.
ஆஸ்திரேலியா மகளிர் அணிக்காக பல முறை உலகக் கோப்பையை வென்ற கேப்டன் லானிங் தலைமையில் இரண்டு முறை ரன்னர்-அப் ஆன டெல்லி அணி, இந்த போட்டியின் மூலம் பட்டத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது. இதற்கிடையில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், 2023 சீசனில் பட்டத்தை வென்ற தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இந்த சீசனை தொடங்கியுள்ளது.
19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் நிக்கி பிரசாத் மற்றும் ஸ்காட்லாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சாரா பிரைஸ் ஆகியோர் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அறிமுகமாகினர்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் யாஸ்திகா பாட்டியா 11 ரன்களில் நடையைக் கட்ட, ஹேலி மேத்யூஸ் ரன்களின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், சிவர்-ப்ரன்ட் நிதானமாக விளையாடி அரை சதம் விளாசினார். இது அவரது WPL இல் 4வது அரை சதம் ஆகும். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனை சொற்ப ரன்களில் நடையைக் கடடினர். ப்ரன்ட் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி தரப்பில் சதர்லேண்ட் 3 விக்கெட்டுகளையும் ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்.
டாஸ் போடும் போது டெல்லி கேப்டன் லானிங் கூறுகையில், “நாங்கள் முதலில் பந்து வீசப் போகிறோம். நேற்றைய போட்டியில் பார்த்தது போல நல்ல விக்கெட் வீழ்த்தி ஒரு அணியாக ஒன்றிணைய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு நல்ல அணியின் வலிமையை நாங்கள் பெற்றுள்ளோம், அதை ஒரு அணியாக வெளிப்படுத்துவதில் தான் இருக்கிறது. உண்மையில் நல்ல ஷாட்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்துவது பற்றியதே அந்த வலிமை எனலாம். சாரா பிரைஸ் மற்றும் நிக்கி பிரசாத் எங்களுக்கு அறிமுகமாகிறார்கள்” என்றார்.
மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் டாஸின் போது, “நேற்று இரவு பந்து நன்றாக பேட்டை நோக்கி வருவதை நாங்கள் பார்த்தோம், நாங்கள் நன்றாக பேட்டிங் செய்வோம் என்று நம்புகிறோம். கடந்த சீசனில், நாங்கள் அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாட விரும்பினோம், இந்த சீசனிலும் அதைச் செய்ய விரும்புகிறோம். சரியான விஷயங்களைச் செய்வதுதான் நாம் செய்ய விரும்புவது. நாங்கள் புதிதாக எதையும் முயற்சிக்க விரும்பவில்லை. கடந்த சீசனில், நாங்கள் கொஞ்சம் வெற்றியைப் பெற்றோம், முதல் சீசனில், நாங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்தோம்” என்றார்.
டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் அணி: ஷபாலி வர்மா, மெக் லானிங், ஆலிஸ் கேப்சி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அன்னாபெல் சதர்லேண்ட், நிக்கி பிரசாத், சாரா பிரைஸ், ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, மின்னு மணி, ராதா யாதவ்
மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி: ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, நாட் ஸ்கிவர்-பிரன்ட், ஹர்மன்பிரீத் கவுர், அமெலியா கெர், சஜீவன் சஜனா, அமன்ஜோத் கவுர், ஜிந்திமணி கலிதா, சமஸ்கிருதி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

டாபிக்ஸ்