Gossip: ஆஷா போஸ்லேவின் பேத்தியுடன் கிசுகிசு.. அவள் எனக்கு சகோதரி போன்றவள்.. விளக்கமளித்த கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Gossip: ஆஷா போஸ்லேவின் பேத்தியுடன் கிசுகிசு.. அவள் எனக்கு சகோதரி போன்றவள்.. விளக்கமளித்த கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்

Gossip: ஆஷா போஸ்லேவின் பேத்தியுடன் கிசுகிசு.. அவள் எனக்கு சகோதரி போன்றவள்.. விளக்கமளித்த கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்

Marimuthu M HT Tamil
Jan 27, 2025 02:31 PM IST

ஆஷா போஸ்லேவின் பேத்தியுடன் கிசுகிசு.. அவள் எனக்கு சகோதரி போன்றவள்.. விளக்கமளித்த கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்

Gossip: ஆஷா போஸ்லேவின் பேத்தியுடன் கிசுகிசு.. அவள் எனக்கு சகோதரி போன்றவள்.. விளக்கமளித்த கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்
Gossip: ஆஷா போஸ்லேவின் பேத்தியுடன் கிசுகிசு.. அவள் எனக்கு சகோதரி போன்றவள்.. விளக்கமளித்த கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்

பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜானாய் போஸ்லே சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுடன் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். அது சமூக ஊடகங்களில் வைரலாகியது. இதனால் இருவரும் டேட்டிங் செய்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்தது. 

இப்போது ஜானாய் போஸ்லே மற்றும் முகமது சிராஜ் இருவரும் காதலிக்கின்றனர் என்ற வதந்தி குறித்து தங்கள் மௌனத்தை உடைத்துள்ளனர். வதந்திகள் பரவிய உடனேயே, அவர் தனது இன்ஸ்டா கதையில் முகமது சிராஜுடன் ஒரு படத்தைப் பகிர்ந்து, "என் அன்பு சகோதரர்" என்று எழுதியிருக்கிறார். 

அடுத்து ஜானாய் பகிர்ந்த அந்த இன்ஸ்டாகிராம் கதையை மறுபதிவு செய்த இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜ், "நான் என் மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன். என் சகோதரியைப் போல் யாரும் இல்லை. அவள் இல்லாமல் நான் எங்கும் இருக்க விரும்பவில்லை. அவளும் நான் இல்லாமல் எங்கும் இருக்க விரும்பவில்லை’’ எனத் தெரிவித்தார். 

வதந்திகளுக்கு காரணம் என்ன?

பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி, ஜானாய் போஸ்லே சமீபத்தில் தனது 23ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவர் தனது பிறந்த நாளை தனது குடும்பத்தினருடனும் நெருங்கிய நண்பர்களுடனும் கொண்டாடினார். 

மும்பையில் உள்ள ஒரு உணவகத்தில் பார்ட்டி கொடுத்த பாடகியான ஜனாய் போஸ்லே, பார்ட்டியில் இருந்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கிரிக்கெட் வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தவிர, பாலிவுட் பிரபலங்களும் பார்ட்டியில் ஒரு பகுதியாக கலந்துகொண்டனர்.

இந்த பதிவில் நடிகர்கள் ஜாக்கி ஷெராஃப், அபய் வர்மா, ஆயிஷா கான் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சுயாஷ் பிரபுதேசாய், சித்தேஷ் லாட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அந்த புகைப்படங்களில் ஒன்றில், முகமது சிராஜ் மற்றும் ஜானாய் போஸ்லே ஒருவருக்கொருவர் பார்த்து புன்னகைப்பதைக் காணலாம். 

கொளுத்திப்போட்ட நெட்டிசன்கள்:

இதைப்பார்த்த நெட்டிசன்களில் சிலர் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கருத்து தெரிவித்தனர். மேலும், முகமது சிராஜை திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்களா? ஜானாய் மற்றும் சிராஜ் ஒருவருக்கொருவர் டேட்டிங் செய்கிறார்களா? எனக் கருத்து பதிவிட்டு தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.

முகமது சிராஜ் என்ன செய்கிறார்?:

தற்போது ரஞ்சி டிராபியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் சேர்க்கப்படவில்லை. பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ், ரஞ்சி டிராபிக்குப் பிறகு ஐபிஎல்லின் 18ஆவது சீசனில் விளையாடத் தயாராகி வருகிறார். கடந்த முறை ஆர்சிபி அணிக்காக விளையாடிய முகமது சிராஜ், இந்த முறை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

ஜானாய் போஸ்லே என்ன செய்கிறார்?:

ஜானாய் போஸ்லேவை பொறுத்தவரை பாலிவுட்டில் பாடகியாக இருக்கிறார். தி பிரைட் ஆஃப் பாரத் -சத்ரபதி சிவாஜி மகாராஜ் படத்தில் ரிஷப் ஷெட்டிக்கு கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இருவரும் தாங்கள் சகோதரத்துவதுடன் பழகி வருவதாகக் கூறி, தங்கள் மீதான கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர். 

 

ಜನೈ ಅವರ ಇನ್​ಸ್ಟಾಗ್ರಾಂ ಸ್ಟೋರಿ.
ಜನೈ ಅವರ ಇನ್​ಸ್ಟಾಗ್ರಾಂ ಸ್ಟೋರಿ.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.