தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Jay Shah: 'இலங்கை கிரிக்கெட் அழிவுக்கு ஜெய் ஷா தான் காரணம்'-இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் குற்றச்சாட்டு

Jay Shah: 'இலங்கை கிரிக்கெட் அழிவுக்கு ஜெய் ஷா தான் காரணம்'-இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் குற்றச்சாட்டு

Manigandan K T HT Tamil
Nov 14, 2023 12:58 PM IST

1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் அர்ஜுன ரணதுங்கா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இலங்கை வாரியத்தை இயக்குவதாகக் குற்றம் சாட்டினார்.

பிசிசிஐ கவுரவச் செயலர் ஜெய்ஷா, இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும், அரசியல்வாதியுமான அர்ஜுன ரணதுங்கா
பிசிசிஐ கவுரவச் செயலர் ஜெய்ஷா, இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும், அரசியல்வாதியுமான அர்ஜுன ரணதுங்கா

ட்ரெண்டிங் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உள் விவகாரங்களில் அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து ஐ.சி.சி, இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதையடுத்து இலங்கை கிரிக்கெட் கடும் அடியை சந்தித்தது. 2023 ஐ.சி.சி உலகக் கோப்பையில் மோசமான தோல்வியைத் தொடர்ந்து, இலங்கையின் விளையாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்க முழு வாரியத்தையும் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய நிகழ்வில், 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் அர்ஜுன ரணதுங்கா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இலங்கை வாரியத்தை இயக்குவதாகக் குற்றம் சாட்டினார்.

ஜெய் ஷாவிற்கும் இலங்கை கிரிக்கெட் வாரிய (SLC) அதிகாரிகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளே இவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக அண்மையில் ஒரு நேர்காணலில் ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். SLC அதிகாரிகளுக்கும் ஜெய் ஷாவிற்கும் இடையிலான தொடர்பு, அவர்கள் SLC ஐ கட்டுப்படுத்தவும் ஆதிக்கம் செலுத்தவும் முடியும் என்ற எண்ணத்தை BCCI க்கு அளித்துள்ளது என்று ரணதுங்க மேலும் கூறினார்.

ஜெய் ஷா அடிப்படையில் இலங்கை கிரிக்கெட்டை நடத்துவதாகவும், அவரது செல்வாக்கு SLC ஐ அழித்துவிட்டதாகவும் ரணதுங்கா கூறினார். ஜெய் ஷாவின் அதிகாரம் இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் அவரது தந்தை அமித் ஷாவால் தான் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"SLC அதிகாரிகளுக்கும் ஜெய் ஷாவிற்கும் இடையிலான தொடர்பு காரணமாக, BCCI அவர்கள் SLC இல் ஆதிக்கம் செலுத்த முடியும் மற்றும் கையாள முடியும் என்று நம்புகிறது" என்று ரணதுங்க மேற்கோள்காட்டி டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

"தந்தையின் பதவியின் காரணமாக ஜெய் ஷாவின் செல்வாக்கு இலங்கை கிரிக்கெட்டில் தீங்கு விளைவிக்கும்" என்று முன்னாள் உலக சாம்பியன் ரணதுங்கா தெரிவித்தார்.

இதனிடையே, “குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! இன்று, குழந்தைகள் நம் வாழ்வில் கொண்டுவரும் மகிழ்ச்சியையும், அப்பாவித்தனத்தையும், எல்லையற்ற கற்பனையையும் கொண்டாடுவோம். அவர்களின் சிரிப்பு உலகம் முழுவதும் எதிரொலிக்கட்டும், அவர்களின் கனவுகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், அன்பு, ஆர்வம் மற்றும் முடிவற்ற சாத்தியக்கூறுகள் நிறைந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது!” என்று ஜெய் ஷா, எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் புதன்கிழமை நடைபெறும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அரையிறுதி மோதலை இந்திய கிரிக்கெட் ஐகான் சச்சின் டெண்டுல்கருடன் முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் கலந்துகொள்வார்கள் மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம், இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ளார், மேலும் வான்கடேவில் அவர் போட்டியைக் கண்டு ரசிக்க வாய்ப்புள்ளது. நியூசிலாந்துடன் இந்தியா மோதவுள்ள நிலையில், மேலும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் விவிஐபி கேலரியில் இடம் பெற வாய்ப்புள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024