ஐபிஎல் 2025: தோல்வியில் இருந்து மீண்டு எழுமா சிஎஸ்கே.. ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் டெல்லி!
ஐபிஎல் 2025: எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் திடமானதாகவும், நன்கு தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இது பேட்டர்களுக்கு ஏற்றதாகத் தோன்றினாலும், ஆட்டம் முன்னேறும்போது அதன் உண்மையான தன்மை மாறும்.

ஐபிஎல் 2025: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) தொடரின் த்ரில்லான ஆட்டம் ஏப்ரல் 5 சனிக்கிழமை சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 17வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (டிசி) அணிகள் மோதுகின்றன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகளுக்கு எதிராக முறையே 50 ரன்கள் மற்றும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, சொந்த மண்ணில் இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறது சிஎஸ்கே. இருப்பினும், அவர்கள் தங்கள் சொந்த ரசிகர்களின் முன்னிலையில் விளையாடி, அவர்களுக்காக ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சியடைவார்கள் என எதிர்பார்க்கலாம்.
அதேவேளையில் டெல்லி கேபிடல்ஸ் அணி அக்சர் படேல் கேப்டன்ஷிப்பில் முதல் இரண்டு மேட்ச்களிலும் ஜெயித்து கெத்தாக வருகிறது. முதல் இரண்டு மேட்ச்சும் விசாகப்பட்டினத்தில் நடந்தது. லக்னோவையும், ஐதராபாத்தையும் வீழ்த்தியது டெல்லி. இம்முறை சென்னையில் 5 முறை சாம்பியன் சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது.
பிட்ச் ரிப்போர்ட்
எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் திடமானதாகவும், நன்கு தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இது பேட்டர்களுக்கு ஏற்றதாகத் தோன்றினாலும், ஆட்டம் முன்னேறும்போது அதன் உண்மையான தன்மை மாறும். கடந்த சீசனின் சராசரி ஸ்கோர் சுமார் 170 ஆக இருந்தது, ஆனால் இந்த முறை ஸ்கோர்கள் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்.
நேருக்கு நேர்
இதுவரை இரு அணிகளும் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 19 முறை சிஎஸ்கேவும், 11 முறை டெல்லியும் ஜெயித்துள்ளன.
CSK vs DC உத்தேச பிளேயிங் லெவன்
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ஜேமி ஓவர்டன், ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, மதீஷா பத்திரனா, கலீல் அகமது.
இம்பேக்ட் பிளேயர்: சிவம் துபே
டெல்லி கேபிடல்ஸ்:
ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரெல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா, முகேஷ் குமார்.
இம்பேக்ட் பிளேயர்: அசுதோஷ் சர்மா
இந்த மேட்ச் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. 3 மணிக்கு டாஸ் போடப்படும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும், ஜியோஹாட்ஸ்டாரிலும் இந்த மேட்ச்சை கண்டு ரசிக்கலாம்.
18வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது.
