சாம்பியன்ஸ் டிராபி 2025: போட்டிகளின் முழு அட்டவணை.. தேதிகள்.. இடங்கள்.. நேரம்.. அனைத்தும் ஒரே செய்தியில்!
ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2025 (பாகிஸ்தான்), ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 (இந்தியா) மற்றும் ஐசிசி ஆண்கள் டி 20 உலகக் கோப்பை 2026 (இந்தியா மற்றும் இலங்கை) ஆகியவற்றிற்கும் இது பொருந்தும்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி மீண்டும் வந்துள்ளது. இறுதியாக, எட்டு அணிகள் பங்கேற்கும் போட்டிக்கான முழு அட்டவணையும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. பிப்ரவரி 19, 2025 அன்று கராச்சியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடக்க ஆட்டத்துடன் போட்டி தொடங்கும். 'ஏ' பிரிவில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இடம் பெற்றுள்ளன.
'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியில் பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
இந்தியா போட்டிகள் மட்டும் மாற்றம்
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் மீதமுள்ள இரண்டு போட்டிகள் பிப்ரவரி 23 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடும். இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயிலும், பரம எதிரியான இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 22-ம் தேதி லாகூரிலும் நடைபெறுகிறது.
