Jasprit Bumrah: பவுலிங் செய்வதற்கு கடினமான பேட்ஸ்மேன் யார்? பும்ரா அளித்த வித்தியாசமான பதிலை பாருங்க-bumrah reply on being asked to name tough batter - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Jasprit Bumrah: பவுலிங் செய்வதற்கு கடினமான பேட்ஸ்மேன் யார்? பும்ரா அளித்த வித்தியாசமான பதிலை பாருங்க

Jasprit Bumrah: பவுலிங் செய்வதற்கு கடினமான பேட்ஸ்மேன் யார்? பும்ரா அளித்த வித்தியாசமான பதிலை பாருங்க

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 30, 2024 06:52 PM IST

Jasprit Bumrah was asked to name a tough batter to bowl to during a recent event.

Jasprit Bumrah: பவுலிங் செய்வதற்கு கடினமான பேட்ஸ்மேன் யார்? பும்ரா அளித்த வித்தியாசமான பதிலை பாருங்க
Jasprit Bumrah: பவுலிங் செய்வதற்கு கடினமான பேட்ஸ்மேன் யார்? பும்ரா அளித்த வித்தியாசமான பதிலை பாருங்க (PTI)

கடந்த 2016இல் அவர் இந்தியா அணியில் அறிமுகமானதில் இருந்து, பும்ராவின் எழுச்சி அபாரமானது. அவரது வேகம், துல்லியம் மற்றும் தனித்துவமான பந்துவீச்சு ஸ்டைல் ஆகியவற்றின் கலவை சிறந்த பேட்ஸ்மேன்களை கூட குழப்பியது. எதிரணியின் வியூகத்தை தவிடுபொடியாக்கும் ஒற்றை பவுலராக பல போட்டிகளில் கோலோச்சி வந்துள்ளார் பும்ரா.

குறிப்பாக டெத் ஓவர்களில் யார்க்கர்களை விருப்பத்துக்கு ஏற்ப வீசும் அவரது திறமை, விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் அவரை இந்தியாவுக்கு ஒரு மதிப்புமிக்க சொத்தாக ஆக்கியுள்ளது.

ஒரு பேட்டர் நுட்பத்தில் சிறிய பலவீனங்களைக் கூட பயன்படுத்திக் கொள்ளும் அசாத்திய சாமர்த்தியம் கொண்ட பும்ரா, உலகெங்கிலும் உள்ள எதிரணிகளால் பயப்படும் ஒரு பந்து வீச்சாளராக மாறினார்.

பும்ராவுக்கு அச்சத்தை ஏற்படுத்திய பேட்ஸ்மேன்கள்

என்னதான் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பவுலராக பும்ரா இருந்தாலும், இவருக்கும் கூட அச்சத்தை ஏற்புடுத்திய பேட்ஸ்மேன்களும் இருந்துள்ளனர். ஒரு நிகழ்ச்சியின் போது, ​​நட்சத்திர இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிடம், அவர் பந்துவீசுவதில் குறிப்பாக சவாலாக இருப்பதாகக் கண்டறிந்த உலகெங்கிலும் ஏதேனும் பேட்டர் இருக்கிறாரா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், " இந்த கேள்விக்கு நான் ஒரு நல்ல பதிலைக் கொடுக்க விரும்புகிறேன். ஆனால் உண்மையான காரணி என்னவென்றால். ஆனால் இந்த விஷயத்தில் எந்தவொரு பேட்ஸ்மேனையும் என் தலையில் ஏற்றிக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் நான் எல்லோரையும் மதிக்கிறேன்.

ஆனால் என் வேலையை நான் நன்றாகச் செய்தால், உலகில் எந்தவொரு பேட்ஸ்மேனாலும் என்னைத் தடுக்க முடியாது.

எனவே நான் எதிராளியை விட என்னையே நான் அதிகமாக நம்புகிறேன். எனது செயல்பாட்டையை பார்க்கிறேன். எல்லாவற்றின் மீதும் எனக்கு கட்டுப்பாடு இருப்பதாக நான் நினைத்தால், எனக்கு சிறந்த வாய்ப்பை நான் வழங்கினால் பேட்ஸ்மேன் என்னைவிட சிறப்பாக செயல்பட்டாலும், சிறப்பானவராக இருந்தாலும் எல்லாம் தானாக நடக்கும்.

டி20 உலகக் கோப்பையில் முக்கிய பங்களிப்பு

கடந்த ஜூன் மாதம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை வெற்றியில் இந்தியாவின் மிக முக்கியமான வீரர்களில் பும்ராவும் ஒருவர். இந்த தொடரில் வெறும் 4.17 என்ற எகானமி விகிதத்தில் பந்து வீசினார். அத்துடன் அவர் 15 விக்கெட்டுகளையும் எடுத்தார், மேலும் அவரது அற்புதமான ஆட்டத்துக்காக போட்டியின் சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிரிக்கெட்டில் இருந்து குட்டி பிரேக்

டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் இலங்கை சுற்றுப்பயணம் சென்ற இந்தியா கடந்த மாதத்தில் டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த தொடருக்கு அடுத்தபடியாத தற்போது இந்தியா வங்காளதேசத்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. எனவே குட்டி பிரேக்கில் இருந்து வரும் பும்ரா வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் அணிக்கு திரும்புவார் என தெரிகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.