பெங்களூரு நெரிசல் விவகாரம்: கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா
பெங்களூரு கூட்ட நெரிசல்: கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் பதவியில் இருந்து ஏ.ஷங்கர், இ.எஸ்.ஜெயராம் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

ஆர்சிபியின் ஐபிஎல் கோப்பை கொண்டாட்டங்களின் போது பெங்களூரு மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு தார்மீக பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (கே.எஸ்.சி.ஏ) செயலாளர் மற்றும் பொருளாளர் வியாழக்கிழமை தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். செயலாளர் ஏ.சங்கர் மற்றும் பொருளாளர் இ.எஸ்.ஜெய்ராம் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், வியாழக்கிழமை இரவு கே.எஸ்.சி.ஏ தலைவரிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
சின்னசாமி மைதானம்
அந்த அறிக்கையில், "கடந்த இரண்டு நாட்களில் வெளிவந்த எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் காரணமாக, எங்கள் பங்கு மிகவும் குறைவாக இருந்தாலும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய அந்தந்த பதவிகளுக்கு எங்கள் ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டங்களில் பங்கேற்க பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானம் முன்பு புதன்கிழமை மாலை கூட்ட நெரிசல் ஏற்பட்டது.