ஐபிஎல் 2025: 10 வருட தவம்.. வரலாறு படைத்த ஆர்சிபி கேப்டன் பட்டிதார்.. பிசிசிஐ அளித்த தண்டனை! அப்படி என்ன செய்தார்?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: 10 வருட தவம்.. வரலாறு படைத்த ஆர்சிபி கேப்டன் பட்டிதார்.. பிசிசிஐ அளித்த தண்டனை! அப்படி என்ன செய்தார்?

ஐபிஎல் 2025: 10 வருட தவம்.. வரலாறு படைத்த ஆர்சிபி கேப்டன் பட்டிதார்.. பிசிசிஐ அளித்த தண்டனை! அப்படி என்ன செய்தார்?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 08, 2025 02:50 PM IST

ஐபிஎல் 2025: 10 ஆண்டுகள் கழித்து தனது அணிக்கு வான்கடே மைதானத்தில் வைத்து வெற்றியை தேடி தந்துள்ளார் ஆர்சிபி கேப்டன் பட்டிதார். ஆனாலும் இதற்கான பிசிசிஐயின் தண்டனையும் பெற்றுள்ளார். இந்த சீசனில் பாண்டியா, ரியான் பராக் ஆகியோருக்கு அடுத்தபடியாக அபராதம் பெற்ற கேப்டனாகியுள்ளார் பட்டிதார்.

வரலாறு படைத்த ஆர்சிபி கேப்டன் பட்டிதார்.. பிசிசிஐ அளித்த தண்டனை! அப்படி என்ன செய்தார்?
வரலாறு படைத்த ஆர்சிபி கேப்டன் பட்டிதார்.. பிசிசிஐ அளித்த தண்டனை! அப்படி என்ன செய்தார்? (PTI)

இதன் தொடர்ச்சியாக தற்போது மும்பை இந்தியன்ஸ் உள்ளூர் மைதானமான வான்கடேவில் வைத்து 10 ஆண்டுகள் கழித்து வெற்றியை பெற்று வரலாறு படைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி அணி இந்த சீசனில் விளையாடிய 4 போட்டிகளில், 3 வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக ஆர்சிபி பெற்ற வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது. ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் ராஜத் பட்டிதாரின் கேப்டன்சியின் அணியின் செயல்பாடானது இந்த முறை சிறப்பாக இருந்து வருகிறது.

வெற்றி ஒரு புறம் இருந்தபோதிலும், குறித்த நேரத்தில் பந்து வீசி முடிக்காமல், தாமதமாக பந்து வீசி ஐபிஎல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக ஆர்சிபி அணி கேப்டன் ராஜத் பட்டிதாருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முதல் முறை குற்றம்

இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள ஊடக குறிப்பில்,"ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ், குறைந்தபட்ச ஓவர்-ரேட் குற்றங்களுடன் தொடர்புடைய ஆர்சிபி அணி முதல் முறையாக விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து அணி கேப்டன் பட்டிதாருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குறைந்த ஓவர் ரேட் குற்றத்தில் ஈடுபட்டதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் ஆகியோருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இந்த லிஸ்டில் மூன்றாவது கேப்டனாக இணைந்துள்ளார் பட்டிதார்.

க்ருணால் பாண்டியா துணிச்சல் அற்புதம்

"இந்த வெற்றிக்கு க்ருணால் பாண்டியா வீசிய கடைசி ஓவர் முக்கிய பங்காற்றியது. எளிதான காரியமாக இல்லை என்றாலும், க்ருணால் பாண்டியா பந்து வீசிய விதம் அற்புதமாக இருந்தது. அவர் துணிச்சலை காட்டிய விதம் அற்புதமாக. நாங்கள் ஆட்டத்தை முடிந்தவரை ஆழமாக கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தோம். இறுதியில் பாண்டியா ஓவரை பயன்படுத்தலாம் என முடிவு செய்தோம்" என வெற்றிக்கு பின்னர் க்ருணால் பாண்டியா செயல்பாடை வெகுவாக பாராட்டினார் ஆர்சிபி கேப்டன் பட்டிதார்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 6 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்த பாண்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் மும்பை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பறித்தார்.

10 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு வான்கடே மைதானத்தில் ஆர்சிபி பெற்ற இந்த வெற்றி சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது. ஆர்சிபி அணி இந்த சீசனில் இதுவரை ஒரேயொரு தோல்வியை தழுவியுள்ளது. உள்ளூர் மைதானமான பெங்களுருவில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளது. இந்த சீசனில் உள்ளூர் மைதானத்தின் சாதகம் பெரும்பாலான அணிக்கு பலன் அளிக்கவில்லை.