வங்கதேசம் எதிராக வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர்.. அட்டவணை வெளியிட்ட பிசிசிஐ - 2025 ஆண்டில் இந்தியா தொடர்கள் முழு விவரம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  வங்கதேசம் எதிராக வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர்.. அட்டவணை வெளியிட்ட பிசிசிஐ - 2025 ஆண்டில் இந்தியா தொடர்கள் முழு விவரம்

வங்கதேசம் எதிராக வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர்.. அட்டவணை வெளியிட்ட பிசிசிஐ - 2025 ஆண்டில் இந்தியா தொடர்கள் முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 15, 2025 08:32 PM IST

வங்கதேசம் சுற்றுப்பயணம் செல்ல இருக்கும் இந்தியா வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. ஆக்ஸ்ட் 17 முதல் 31 வரை ஒரு மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது

வங்கதேசம் எதிராக வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர்.. அட்டவணை வெளியிட்ட பிசிசிஐ - 2025 ஆண்டில் இந்தியா தொடர்கள் முழு விவரம்
வங்கதேசம் எதிராக வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர்.. அட்டவணை வெளியிட்ட பிசிசிஐ - 2025 ஆண்டில் இந்தியா தொடர்கள் முழு விவரம் (REUTERS)

இந்த தொடர் முடிவுற்றவுடன் வங்கதேசம் சுற்றுப்பயணம் செல்லும் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் என வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறும் நிலையில், பின்னர் டி20 தொடர் நடக்கிறது. இதையடுத்து இந்த தொடரின் முழு அட்டவணையை பிசிசஐ அறிவித்துள்ளது. அதன் படி ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் ஒரு நாள் போட்டி மிர்பூரில் உள்ள ஷேர் பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து இரண்டாவது ஒரு நாள் போட்டி அதே மைதானத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறுகிறது. மூன்றாவது ஒரு நாள் போட்டி ஆகஸ்ட் 23ஆம் தேதி சட்டோகிராமில் நடைபெறுகிறது.

டி20 போட்டி அட்டவணை

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் போட்டி சட்டோகிராமில் ஆகஸ்ட் 26ஆம் தேதியும், இரண்டாவது போட்டி மிர்பூரில் ஆகஸ்ட் 29ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி மிர்பூரில் ஆக்ஸ்ட் 31ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்

வங்கதேசத்துக்கு எதிரான தொடர் முடிவுற்ற பின்னர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடுகிறது. முதல் போட்டி அகமதாபாத்தில் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்குகிறது. இதன் பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தொடருக்கு பின்னர் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செல்லும் இந்தியா அக்டோபர் 19 முதல் நவம்பர் 8 வரை மூன்று ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான தொடர்

இதன் பின்னர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் தென் ஆப்பரிக்கா அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள், 5 டி20 என அனைத்து வகை கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கிறது.

முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், முதல் போட்டி டெல்லியில் வைத்தும் நவம்பர் 14ஆம் தேதி, இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் வைத்து நவம்பர் 22ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சியிலும், இரண்டாவது ஒரு நாள் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி ராய்ப்பூரிலும், மூன்றாவது ஒரு நாள் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி விசாகபட்டினத்திலும் நடக்கிறது.

இறுதியாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி டிசம்பர் 9 கட்டாக்கிலும், இரண்டாவது டி20 போட்டி டிசம்பர் 11ஆம் தேதி முல்லான்பூரிலும், மூன்றாவது டி20 போட்டி டிசம்பர் 14 தர்மசாலாவிலும், நான்காவது டி20 போட்டி டிசம்பர் 17 லக்னோவிலும், 5வது டி20 போட்டி டிசம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்திலும் நடக்க இருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்தியா - இங்கிலாந்து இடையே ஒரு நாள், டி20 என வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் ஒரு நாள் தொடரில் 3-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 4-1 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது. இந்த தொடருக்கு பின் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஒரு நாள் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், இளங்கலை காட்சிவழி தொடர்பியல், முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்றவர். 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் என 16 ஆண்டுகளுக்கு மேல் அனுபவத்துடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் அனைத்து பிரிவுகளிலும் கட்டுரை எழுதுபவர். விளையாட்டு, கிரிக்கெட், சினிமா, லைப்ஸ்டைல் பிரிவுகளில் தனித்துவமான பங்களிப்பை அளித்து வருகிறார். விளையாட்டு, சினிமா, பயணம், சமைத்தல் பிடித்தமான பொழுபோக்கு
Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.