Ind vs Aus 1st Test: 4 பேட்ஸ்மேன்கள் அரை சதம், பாக்ஸிங் டே டெஸ்டை அமர்க்களமாக தொடங்கிய ஆஸி., அணி.. நடுவர் செய்த சாதனை
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி பைகிராப்ட், 100 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றிய நான்காவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 86 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை குவித்துள்ளது. ஸ்மித் அரை சதம் அடித்து 68 ரன்களுடன் கேப்டன் கம்மின்ஸ் 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
அறிமுக வீரரான சாம் கோன்ஸ்டாஸ் தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்து 60 ரன்கள் விளாசி அசத்தினார். பும்ராவின் பந்துவீச்சில் சிக்ஸரை பறக்கவிட்டு வரலாற்று சாதனை புரிந்தார்.
சாம் கான்ஸ்டாஸ் அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்து வரலாறு படைத்தார். 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தில் சிக்ஸர் அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் ஆனார். கடைசியாக பும்ரா ஓவரில் சிக்ஸர் அடித்ததும் ஆஸி., பேட்ஸ்மேன் தான். அவர் கேமரூன் கிரீன்.
அதைத்தொடர்ந்து அவர் ஜடேஜா வீசிய 20வது ஓவரில் ஆட்டமிழந்தார். உஸ்மான் கவாஜா 57 ரன்கள் விளாசி பும்ரா ஓவரில் வீழ்ந்தார். லபுசேன் 72 ரன்களும், டிராவிஸ் ஹெட் டக் அவுட்டும் ஆகினர்.
பும்ராவுக்கு 3 விக்கெட்
மிட்செல் மார்ஷ் 4 ரன்கள், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 31 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தனர்.
ஸ்மித், பேட் கம்மின்ஸ் களத்தில் உள்ளனர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இன்றைய ஆட்டத்தில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ், ஜடேஜா, வாஷிங்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
போட்டி நடுவர் சாதனை
இதனிடையே, 100 ஆண்கள் டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றிய நான்காவது நபர் என்ற பெருமையை ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி பைகிராப்ட் பெற்றுள்ளார்.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் பாக்ஸிங் டே டெஸ்டின் போது பைகிராஃப்ட் இந்த மைல்கல்லை எட்டினார்.
1983 முதல் 1992 வரை ஜிம்பாப்வே அணிக்காக 3 டெஸ்ட் மற்றும் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். முன்னதாக இந்த இலக்கை எட்டிய மூன்று போட்டி நடுவர்கள் குழுவில் அவர் இணைகிறார்.
இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ரஞ்சன் மடுகல்ல 225 முறை போட்டி நடுவராக இருந்துள்ளார், அதே நேரத்தில் நியூசிலாந்து வீரர் ஜெஃப் குரோவ் (125 முறை) மற்றும் இங்கிலாந்து முன்னாள் தொடக்க வீரர் கிறிஸ் பிராட் (123 முறை) ஆகியோர் மட்டுமே இன்று வரை மூன்று இலக்கங்களை எட்டிய நடுவராக உள்ளனர்.
போட்டி நடுவர்களின் ஐ.சி.சி எலைட் குழுவில் இருப்பது ஒரு பெரிய மரியாதை மற்றும் மகிழ்ச்சி என்று பைகிராஃப்ட் கூறினார். ஐசிசியின் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
"பல ஆண்டுகளாக எமிரேட்ஸ் ஐ.சி.சி எலைட் போட்டி நடுவர் குழுவில் இருப்பது ஒரு பெரிய மரியாதை மற்றும் மகிழ்ச்சி, மேலும் உலகம் முழுவதும் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியது, பல்வேறு கலாச்சாரங்களை அறிய முடிந்தது. ஐ.சி.சி.யின் ஆதரவு, எனது சக போட்டி அதிகாரிகள், கடந்த கால மற்றும் நிகழ்கால போட்டி அதிகாரிகள், அவர்களின் தொழில்முறை மற்றும் நட்பு, மற்றும் எனது மனைவி கரேன் மற்றும் எனது குடும்பத்தினரின் ஊக்கம் மற்றும் சகிப்புத்தன்மைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று பைகிராஃப்ட் கூறினார்.
இது தனக்கு ஒரு பலனளிக்கும் பயணம் என்றும், பயணத்தின் தருணத்தை அவர் பொக்கிஷமாக வைத்திருப்பார் என்றும் அவர் கூறினார்.
"இது ஒரு பலனளிக்கும் பயணம், அதன் ஒவ்வொரு தருணத்தையும் நான் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
2009 முதல் 238 ஆண்கள் ஒருநாள் போட்டிகள், 174 ஆண்கள் டி20 மற்றும் 21 பெண்கள் டி 20 போட்டிகளிலும் பைகிராஃப்ட் நடுவராக பணியாற்றியுள்ளார்.
டாபிக்ஸ்