Afghanistan Innings: உலகக் கோப்பையில் முதல் சதம் விளாசிய ஆப்கன் வீரர்-ஆஸி.,க்கு 292 ரன்கள் இலக்கு
Australia vs Afghanistan: உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை இப்ராஹிம் ஜத்ரான் பெற்றார்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய 39வது போட்டியில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பிற்பகல் 2:00 மணிக்கு இந்திய நேரப்படி களமிறங்கியது. 1.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் ஜெயித்த ஆப்கன், பேட்டிங் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆப்கன் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடவுள்ளது. ஹேஸில்வுட் 2 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் 1 விக்கெட்டையும் எடுத்தார்.ஆடம் ஜாம்பாவுக்கு 1 விக்கெட் கிடைத்தது. ரஷித் கான் 18 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார். 3 சிக்ஸர்களையும் பறக்க விட்டார்.
உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை இப்ராஹிம் ஜத்ரான் பெற்றார்.
இப்ராஹிம் ஜத்ரான் சதம் விளாசினார். ரஹ்மனுல்லா குர்பாஸ் 21 ரன்களிலும், ரஹ்மத் ஷா 30 ரன்களிலும் நடையைக் கட்டினர்.
கேப்டன் ஷாஹிதி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒமர்ஜாய் 22 ரன்கள், முகமது நபி 12 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கிளென் மேக்ஸ்வெல் 10 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
நவீன் உல் ஹக் ஆப்கன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன் ஆகியோர் அணியில் இல்லை. மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்தப் போட்டியில் கிடைக்கும் ஒரு வெற்றி ஆஸ்திரேலியாவை அரையிறுதிக்கு செல்வதை உறுதிப்படுத்தும். டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்யலாம் என கணிக்கப்பட்டது. ஏனெனில் ஆட்டம் முன்னேறும்போது பந்துவீச்சாளர்களுக்கு சற்று வாய்ப்பு பிரகாசமாகலாம் என தெரிகிறது. கடந்த 20 போட்டிகளில் இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 260 ரன்களாக இருந்தது.
அந்தக் கணிப்பை மெய்ப்பிக்கும் வகையில் ஆப்கன் பேட்டிங்கையே தேர்வு செய்துள்ளது. எனவே, அந்த அணிக்கு இது சாதகமாக இருக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்