Ind vs Aus: மழையால் தொடரும் சவால்.. முதல் இன்னிங்சில் தடுமாறும் இந்திய கிரிக்கெட் அணி
திங்களன்று பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்டின் 3 வது நாளில் மழை பெய்ததால் ஆட்டம் சற்று நேரம் தடைபட்டது. மூன்றாவது நாள் தொடங்கியதும் ஆஸி., முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை எடுத்தது.

Ind vs Aus: மழையால் தொடரும் சவால்.. முதல் இன்னிங்சில் தடுமாறும் இந்திய கிரிக்கெட் அணி (AP)
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு இந்திய பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைத்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க சிரமமப்பட்டு வருகின்றனர்.
கருமேகங்கள் சூழ்ந்த வானத்தில் இருந்து மழை பெய்ததால், இரு அணிகளும் மதிய உணவு இடைவேளையை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
முதல் ஒரு மணி நேரத்தில் மிட்செல் ஸ்டார்க்கை வெளியேற்றி இந்தியாவுக்கு வழி வகுத்தவர் ஜஸ்பிரித் பும்ரா. ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்து ஸ்டார்க் அபாரமாக ஆடினார். பின்னர் அவரும் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து ஆஸி., அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
