அதிவேக சதமடித்த ஹெட்.. பவுலிங்கில் பும்ரா, சிராஜ் மிரட்டல்! தோல்வியை தவிர்க்கும் நெருக்கடியில் இந்தியா பேட்ஸ்மேன்கள்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  அதிவேக சதமடித்த ஹெட்.. பவுலிங்கில் பும்ரா, சிராஜ் மிரட்டல்! தோல்வியை தவிர்க்கும் நெருக்கடியில் இந்தியா பேட்ஸ்மேன்கள்

அதிவேக சதமடித்த ஹெட்.. பவுலிங்கில் பும்ரா, சிராஜ் மிரட்டல்! தோல்வியை தவிர்க்கும் நெருக்கடியில் இந்தியா பேட்ஸ்மேன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 07, 2024 04:52 PM IST

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட் செய்த ட்ராவிஸ் ஹெட் அதிவேக சதமடித்தார். பவுலிங்கில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை பும்ரா, சிராஜ் ஆகியோர் மிரட்டிய போதிலும் அந்த அணி 157 ரன்கள் முன்னிலை பெற்றது.

அதிவேக சதமடித்த ஹெட்.. பவுலிங்கில் பும்ரா, சிராஜ் மிரட்டல்! தோல்வியை தவிர்க்கும் நெருக்கடியில் இந்தியா பேட்ஸ்மேன்கள்
அதிவேக சதமடித்த ஹெட்.. பவுலிங்கில் பும்ரா, சிராஜ் மிரட்டல்! தோல்வியை தவிர்க்கும் நெருக்கடியில் இந்தியா பேட்ஸ்மேன்கள் (AP)

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்களில் ஆல்அவுட்டாகி 157 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியா வலுவான முன்னிலை

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 20 ரன்களுடன் களத்தில் இருந்த ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் தனது அரைசத்ததை பூர்த்தி செய்தார். இதற்கிடையே ஆட்டம் தொடங்கிய மூன்றாவது ஓவரிலேயே களத்தில் இருந்த மெஸ்வீனி 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ராவின் வேகத்தில் சரிந்தார். இவருக்கு அடுத்தபடியாக வந்த ஸ்டார் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

ஹெட் அபாரம்

இந்தியாவுக்கு எதிராக வெள்ளை பந்து, சிவப்பு பந்து, பிங்க் பந்து என அனைத்து வகை போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேனாக ஹெட் இருந்து வருகிறார். விக்கெட் சரிவை தடுத்து பொறுப்புடன் பேட் செய்த ரெட் இந்திய பவுலர்களின் பந்து வீச்சை நான்கு புறங்களிலும் அடித்து ரன்களை குவித்தார்.

சிறப்பாக பேட் செய்த ஹெட் தனது சதத்தை பூர்த்தி செய்தார். 111 பந்துகளில் சதமடித்த இவர், பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளில் அதி வேக சதமடித்தவர் என்கிற சாதனை புரிந்துள்ளார். ஹெட் உடன் நல்ல பார்ட்னஷிப் அமைத்த லபுசேன் 69 ரன்கள் அடித்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல் மிட்செல் மார்ஷ் 9, அலெக்ட் கேரி 15 ரன்கள் என பெரிதாக பங்களிப்பு அளிக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், சதத்துக்கு பின்னரும் ரன் வேட்டையை தொடர்ந்தஹெட் 140 ரன்கள் எடுத்து, முகமது சிராஜ் பந்தில் கிளீன் போல்டு ஆகி வெளியேறினார். 141 பந்துகளை எதிர்கொண்ட ரெட் தனது இன்னிங்ஸில் 17 பவுண்டரி, 4 சிக்ஸர்களை அடித்தார்.

ரெட் அவுட்டான பிறகு வந்த ஸ்டார்க் விரைவாக 18 ரன்கள் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன் குவிக்காத நிலையில், ஆஸ்திரேலியா 337 ரன்கள் அடித்து 157 முன்னிலையுடன் தனது முதல் இன்னிங்ஸை முடித்தது.

பவுலிங்கில் மிரட்டிய பும்ரா - சிராஜ்

இந்திய பவுலர்களில் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா, சிராஜ் ஆகியோர் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியை கொடுத்தனர். இருப்பினும் அவர்கள் சிறப்பாக கையாண்டனர். பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நிதிஷ் குமார் ரெட்டி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இந்திய பவுலர்களில் ஹர்ஷித் ராணா மட்டும் விக்கெட்டுகள் எதுவும் வீழ்த்தவில்லை. 

இந்திய இரண்டாவது இன்னிங்ஸ்

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா பவுலர்கள் அதிர்ச்சி கொடுத்துள்ளனர். ஓபனரான கேஎல் ராகுல் 7 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

முதன் இன்னிங்ஸில் டக் அவுட்டான ஜெய்ஸ்வால் இந்த இன்னிங்ஸில் கொஞ்சம் பொறுப்புடன் பேட் செய்தார். இருப்பினும் 24 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கோலி மற்றொரு சொதப்பலான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார் 11 ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினார். இவரை போல் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் பேட்டிங்கில் சொதப்பினார். 6 ரன் எடுத்து கம்மின்ஸ் பந்தில் போல்டானார்.

டாப் ஆர்டரில் விரைவாக ரன்களை குவித்து வந்த சுப்மன் கில் 28 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் கிளீன் போல்டு ஆனார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 24 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் இந்தியா ஆஸ்திரேலியாவை விட 29 ரன்கள் குறைவாக உள்ளது. தோல்வியை தவிர்க்கும் நெருக்கடியில் விளையாடி வருகின்றனர். களத்தில் ரிஷப் பண்ட் 28, நிதிஷ் குமார் ரெட்டி 15 ரன்களுடன் பேட் செய்து வருகிறார்கள். 

ஆஸ்திரேலியா பவுலர்களில் போலாந்த், கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.