AUS vs BAN Preview: கடைசி லீக் ஆட்டத்திலும் வங்கதேசத்துக்கு நெருக்கடி! ஆஸி.,க்கு எதிராக கட்டாய வெற்றி போட்டியில் மோதல்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Aus Vs Ban Preview: கடைசி லீக் ஆட்டத்திலும் வங்கதேசத்துக்கு நெருக்கடி! ஆஸி.,க்கு எதிராக கட்டாய வெற்றி போட்டியில் மோதல்

AUS vs BAN Preview: கடைசி லீக் ஆட்டத்திலும் வங்கதேசத்துக்கு நெருக்கடி! ஆஸி.,க்கு எதிராக கட்டாய வெற்றி போட்டியில் மோதல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 11, 2023 06:10 AM IST

உலகக் கோப்பை 2023 தொடரில் விளையாட இருக்கும் கடைசி போட்டியாக இருந்தாலும், சாம்பியன்ஸ் தொடருக்கான வாய்ப்பை தக்க வைக்கும் நெருக்கடியுடன் வங்கதேசம் அணி இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணி இன்று பலப்பரிட்சை
ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணி இன்று பலப்பரிட்சை

ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை அரையிறுதிக்கு முன்னர் பயிற்சியாக இந்தப் போட்டி அமைகிறது. எனவே முக்கிய வீரர்களுக்கு ஓய்வை கொடுக்கலாம் என தெரிகிறது. அதேசமயம் இந்தப் போட்டியில் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறவும் வாய்ப்பு உள்ளது.

வங்கதேசம் அணி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலை வங்கதேசத்துக்கு உள்ளது. ஏனென்றால் தோல்வியை தழுவினால் 9வது இடத்தில் இருக்கும் 8வது இடத்துக்கு முன்னேறும். அத்துடன் 2025இல் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியனஸ் லீக் தொடரில் விளையாட தகுதி பெறும். எனவே இதை தவரிப்பதற்கும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் வாய்ப்பை தக்க வைப்பதற்கும், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வங்கேதசம் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற நிலையில் உள்ளது.

கடந்த போட்டியில் இலங்கை பேட்ஸ்மேன் மேத்யூஸ் விக்கெட்டை டைம் அவுட் முறையில் அப்பீல் செய்ததற்கு, வங்கதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இதையடுத்து உலகக் கோப்பை 2023 தொடரிலிருந்து விலகிய அவர், இன்றைய போட்டியில் விளையாடப்போவதில்லை. அவருக்கு பதிலாக நஜ்முல் ஷாண்டோ கேப்டனாக செயல்படுவார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த போட்டியை மிஸ் செய்த ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், வங்கதேசத்து எதிராக களமிறங்குவார் என தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சம்பிரதாய போட்டியாகவும், வங்கதேசத்துக்கு முக்கியதுவம் வாய்ந்த போட்டியாகவும் இன்றைய ஆட்டம் அமைகிறது

பிட்ச் நிலவரம்

பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக இருந்து வரும் புனே மைதானத்தில் முதல் பேட்டிங் செய்த அணி 300க்கு மேல் ஸ்கோர் குவித்துள்ளது. அதே போல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் நன்றாக பவுன்ஸ் ஆகி உதவிகரமாக செயல்பட்டுள்ளது.

மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும், 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகள் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 3 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் உள்ளது. எனவே இன்று வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக உலகக் கோப்பை தொடரில் வீழ்த்திய பெருமையை பெறும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.