Asia Cup 2023: கடைசி நேரத்தில் மாறிய டார்கெட் - ‘சொல்லாமல் விட்டனர்’ - ரஷீத் கான் புலம்பல்
ரன்சேஸிங்கின் போது டார்கெட் எப்படியெல்லாம் அடுதடுத்த பந்துகளில் மாறும் என்பதை பற்றி முன்னரே அணி நிர்வாகிகள் சொல்லவில்லை என ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் புலம்பியுள்ளார்
ஆசிய கோப்பை 2023 தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக வெற்றியின் அருகே வந்து தோல்வியை தழுவி வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி.
இந்த போட்டியில் இலங்கை நிர்ணயித்த இலக்கை 291 ரன்கள் இலக்கை 37.1 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும் என நிர்பந்தம் இருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
ஒரு பந்தில் 3 ரன்கள் மட்டும் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் அவுட்டானார். அந்த நேரத்தில் 37.5 ஓவருக்குள் 295 ரன்கள் எடுக்க வேண்டும் என ரன்ரேட்டானது சட்டென மாறியது.
ஆனால் அது குறித்து அறியாத ஆப்கானிஸ்தான் அணியின் கடைசி பேட்ஸ்மேன் டாட் பால் ஆடியதோடு மட்டுமல்லாமல் தனது விக்கெட்டையும் பறிகொடுத்தார். இதனால் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை தழுவியது.
இதற்கிடையே இந்த ரன்ரேட் மாற்றம் குறித்து முன்னரே தெரியவந்திருந்தால் களத்தில் இருந்த ரஷீத் கான், ஸ்டிரைக் எடுத்து அடிக்க முயற்சித்திருப்பார். துர்தஷ்டவசாமாக அது நடைபெறவில்லை.
போட்டி முடிந்த பின்பு தனது அணிக்கு மற்றொரு வாய்ப்பு உருவானது பற்றி தெரிந்த ரஷீத் கான், இதுபற்றி முன்னரே தெரிவிக்காமல் ஏமாற்றிவட்டதாக புலம்பியுள்ளார்.
இதுகுறித்து ரஷீத் கான் கூறியதாவது:
ஆட்ட அதிகாரிகள் ரன்ரேட் குறித்த சரியான கணக்கீடுகளைதெரிவிக்கவில்லை. நாங்கள் 37.1 ஓவர்களில் வெற்றி பெற வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
மற்ற படி 295 அல்லது 297 ரன்கள் எடுத்தால் கூட எங்களால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற தகவலை எங்களுக்கு தெரிவிக்காமல் போனார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போட்டியில் மயிரிழையில் வெற்றி பெற்ற இலங்கை சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்