IND vs USA Live Score: ஒரே ஓவரில் 2 விக்கெட்! சாதனை புரிந்த அர்ஷ்தீப் சிங் - இந்தியா பவுலிங்கில் அடங்கிபோன யுஎஸ்ஏ
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Usa Live Score: ஒரே ஓவரில் 2 விக்கெட்! சாதனை புரிந்த அர்ஷ்தீப் சிங் - இந்தியா பவுலிங்கில் அடங்கிபோன யுஎஸ்ஏ

IND vs USA Live Score: ஒரே ஓவரில் 2 விக்கெட்! சாதனை புரிந்த அர்ஷ்தீப் சிங் - இந்தியா பவுலிங்கில் அடங்கிபோன யுஎஸ்ஏ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 13, 2024 05:42 PM IST

ஆட்டத்தின் முதல் ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தி பவுலிங்கில் சாதனை புரிந்தார் இந்திய பவுலரான அர்ஷ்தீப் சிங். இந்திய பவுலிங்கில் அடங்கிபோன யுஎஸ்ஏ பெரிதாக ரன் குவிக்கவில்லை.

சாதனை புரிந்த அர்ஷ்தீப் சிங். இந்தியா பவுலிங்கில் அடங்கிபோன யுஎஸ்ஏ
சாதனை புரிந்த அர்ஷ்தீப் சிங். இந்தியா பவுலிங்கில் அடங்கிபோன யுஎஸ்ஏ (ICC - X )

அதன்படி இன்றைய போட்டியில் இந்தியா, யுஎஸ்ஏ ஆகிய அணிகளில் ஒன்று, முதல் தோல்வியை சந்திக்கும். அத்துடன் வெற்றியடையும் அணி இந்த குரூப்பில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் என்கிற வாய்ப்பும் உள்ளது.

இந்தியா பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த யுஎஸ்ஏ அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக நிதிஷ் குமார் 27, ஸ்டீவன் டெய்லர் 24 ரன்கள் அடித்தனர். நல்ல பார்மில் இருந்து வந்த ஆரோன் ஜோன்ஸ் 11 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

இந்திய பவுலர்களில் அர்ஷ்தீப் சிங் 4, ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

அர்ஷ்தீப் கலக்கல் பவுலிங்

இந்த ஆட்டத்தின் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியதுடன், முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து அணிக்கு அற்புதமான தொடக்கத்தை தந்தார் ஹர்ஷ்தீப். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் முதல் ஓவரில் இந்தியாவுக்காக 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலிங் என்ற பெருமையை பெற்றார்.

தனது 4 ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் சர்வதேச டி20 போட்டிகளில் ஹர்ஷ்தீப் சிங் சிறந்த பவுலிங்கை பதிவு செய்தார். மேலும் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய பவுலரின் சிறந்த பவுலிங்காகவும் இது அமைந்துள்ளது.

சிறந்த பீல்டிங்

இந்த போட்டியில் இந்திய பவுலர்கள் மற்றும் பீல்டர்கள் சிறப்பாக செயல்பட்டனர். யுஎஸ்ஏ அணிக்கு எதிராக இந்திய ஸ்பின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஒரு ஓவர் கூட வீசவில்லை.

அதேபோல் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் டூபே, ஒரு ஓவர் பவுலிங் செய்த நிலையில் 11 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இரண்டு கேட்ச்களை பிடித்து திருப்புமுனை தந்தார். அதேபோல் முகமது சிராஜ் பவுண்டரி அருகே நல்ல கேட்ச் ஒன்றை பிடித்தார்.

இந்த போட்டியில் இந்திய பவுலர்கள் மற்றும் பீல்டர்கள் சிறப்பாக செயல்பட்டனர். யுஎஸ்ஏ அணிக்கு எதிராக இந்திய ஸ்பின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஒரு ஓவர் கூட வீசவில்லை.

அதேபோல் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் டூபே, ஒரு ஓவர் பவுலிங் செய்த நிலையில் 11 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை

யுஎஸ்ஏ இன்னிங்ஸில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி பேட்ஸ்மேனான கோரே ஆண்டர்சன் 15 ரன்கள் மட்டும் எடுத்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.