KKR vs SRH Live Score: சிங்கிள் ரன்களின் வெளியேறிய டாப் ஆர்டர்! மிரட்டல் அடியால் கொல்கத்தாவை கரை சேர்த்த ஆண்ட்ரே ரசல்
கடைசி 5 ஓவர்களில் சன் ரைசர்ஸ் பவுலர்களை பந்து வீச்சை மிரட்டல் அடி அடித்த கொல்கத்தா ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் வான வேடிக்கை காட்டினார். டாப் ஆர்டர் சொதப்பியபோதிலும் கொல்கத்தா மிக பெரிய இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது
ஐபிஎல் 2024 தொடரின் மூன்றாவது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே கொல்கத்த ஈடன் கார்டன் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் காயம் காரணமாக பங்கேற்காத கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த சீசனில் முழு உடல் தகுதியுடன் விளையாட வந்துள்ளார்.
உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற கேப்டன் பேட் கம்மின்ஸ் சன் ரைசர்ஸ் அணிக்கும், முதல் ஐபிஎல் போட்டியிலும் கேப்டனாக களமிறங்கினார்.
சன் ரைசர்ஸ் பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 64, ஓபனிங் பேட்ஸ்மேன் சால்ட் 54, ரமன்தீப் சிங் 35, ரிங்கு சிங் 23 ரன்கள் எடுத்தார்கள்
சன் ரைசர்ஸ் பவுலர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜன்3 விக்கெட்டுகளை எடுத்தார். ஸ்பின்னர் மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டுகளையும், கேப்டன் பேட் கம்மனிஸ் ஒரு விக்கெடும் எடுத்தனர்.
சொதப்பிய டாப் ஆர்டர்
கொல்கத்தா அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்ட பவுலிங் ஆல்ரவுண்டர் சுனில் நரேன் 2, வெங்கடேஷ் ஐயர் 7, ஷ்ரேயாஸ் ஐயர் 0, நிதிஷ் ராணா 9 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட்டானார்கள்.
ஷ்ரேயாஸ் டக் அவுட்
காயம் காரணமாக கடந்த சீசனை மிஸ் செய்தார் ஷ்ரேயாஸ் ஐயர். இந்த முறை முழு உடல் தகுதியுடன் வந்தபோதிலும் போட்டி தொடங்குவதற்கு முன்னர் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்ததால், அவர் முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று இருந்தது.
ஆனால் அவர் முதல் போட்டியில் விளையாடிய நிலையில் 2 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி தனது ஐபிஎல் கம்பேக் போட்டியில் ஏமாற்றம் அளித்தார்.
சால்ட் அரைசதம்
ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் நிலையாக பேட் செய்து வந்த கொல்கத்தா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பில் சால்ட், அரைசதமடித்தார். 54 ரன்கள் எடுத்த அவர் ஸ்பின்னர் மார்கண்டே சுழலில் சிக்கினார்.
ரசல் அதிரடி
கடைசி 7 ஓவரில் பேட் செய்த ரசல் - ரிங்கு சிங் அதிரடியாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் இணைந்து 81 ரன்கள் சேர்த்தனர்.
இதில் சன் ரைசர்ஸ் பவுலர்கள் பந்து வீச்சை மிரட்டல் அடி அடித்த ரசல் 20 பந்துகளில் அதிவேக அரைசதமடித்தார். அவர் தனது இன்னிங்ஸில் 25 பந்துகளில் 64 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தனது இன்னிங்ஸில் 7 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர், 3 பவுண்டரிகளை அடித்தார்.
ரசலின் அதிரடியால் கடைச 5 ஓவரில் கொல்கத்தா அணி 85 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்த சீசனில் 200 ரன்களுக்கு மேல் அடித்த முதல் அணியாக மாறியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.