IND vs AUS உலகக் கோப்பை ஃபைனல்.. அகமதாபாத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Aus உலகக் கோப்பை ஃபைனல்.. அகமதாபாத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா?

IND vs AUS உலகக் கோப்பை ஃபைனல்.. அகமதாபாத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா?

Manigandan K T HT Tamil
Nov 19, 2023 10:04 AM IST

உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி, அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்பு கிடையவே கிடையாது. ஒருவேளை மழை பெய்தால் என்ன நடக்கும்?

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன் இறுதிப் போட்டிக்கு முன்னதாக பயிற்சியின் போது ரசிகர்கள் இந்திய கொடிகளை அசைத்த காட்சி
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன் இறுதிப் போட்டிக்கு முன்னதாக பயிற்சியின் போது ரசிகர்கள் இந்திய கொடிகளை அசைத்த காட்சி (PTI)

கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஆக்ரோஷமான தொடக்கம், விராட் கோலியின் சாதனை முறியடிக்கும் ரன், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் ஆதரவு மற்றும் முகமது ஷமியின் அபாரமான பவுலிங் ஆகியவை முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்தியா கோப்பையை வெல்லும் தகுதியான அணியாக உருவெடுக்க வழிவகுத்தது. இருப்பினும், ஆஸ்திரேலியா வலுவான போட்டியாளராக எதிர்த்து நிற்கிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை விட வேறு எந்த இரண்டு அணிகளும் உலகக் கோப்பையில் நேருக்கு நேர் (13 முறை) மோதியதில்லை. மேலும் 2003 இல் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரிக்கி பாண்டிங் 121 பந்தில் 140 ரன்கள் எடுத்து இந்திய நம்பிக்கையை தகர்க்க 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தோல்விக்கு பழிவாங்க ரோஹித் சர்மா தலைமையிலான அணி தற்போது எழுச்சி பெற்று காத்திருக்கிறது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் பெரிய இறுதிப் போட்டிக்கு நாம் தயாராகும்போது, ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் வானிலை முன்னறிவிப்பைப் பார்ப்போம்.

 

2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அகமதாபாத்தின் வானிலை முன்னறிவிப்பு என்ன?

உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி, அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்பில்லை. அக்யூவெதரின் கூற்றுப்படி, "நிறைய சூரிய ஒளி" இருக்கும், மதியம் 33 டிகிரி செல்சியஸ் வெப்பமாக உயரும், அதற்கு முன் இரவில் 20 டிகிரி செல்சியஸ் வரை குறையும். எனவே, ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் ஒரு முழுமையான மற்றும் தடையற்ற போட்டியை எதிர்பார்க்கலாம்.

ஞாயிற்றுக்கிழமையில் மழை பெய்து போட்டியை முடிக்க முடியாவிட்டால், திங்கள்கிழமை ரிசர்வ் நாளாக ஐசிசி ஏற்பாடு செய்துள்ளது. ஆட்டம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடங்கும்.

இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை இந்தியா தனது  தொடக்கத்திலேயே சென்னையில் வீழ்த்தியது. இருப்பினும், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அரையிறுதி வெற்றி உட்பட தொடர்ச்சியாக வென்றதன் பின்னர் ஆஸ்திரேலியா  மீண்டும் போட்டியில் களமிறங்கியது.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.