Suryakumar Yadav : ‘நான் நினைச்சுகூட பார்க்கல.. நான் அறையில் உட்கார்ந்து யோசிச்சேன்’ - சூர்யகுமார் யாதவ்
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் விளையாடிய காலத்தை நினைவு கூர்ந்தார்.

'நான் இந்திய அணிக்குத் தலைமை தாங்குவது குறித்து நினைத்துப் பார்க்கவில்லை, அதுவும் கொல்கத்தாவில் நடப்பது பெருமையாக இருக்கிறது. அந்தக் கால நினைவை அசைபோட்டு பார்க்கிறேன். அதுவொரு அழகான நினைவாக இருக்கு' என்றார் இந்திய டி20 கிரிக்கெட் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடிய காலத்தை நினைவு கூர்ந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் புதன்கிழமை பிரபலமான ஈடன் கார்டன்ஸில் தொடங்குகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் ஜனவரி 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் முறையே சென்னை மற்றும் ராஜ்கோட்டில் நடைபெறும். தொடரின் நான்காவது போட்டி ஜனவரி 31 அன்று புனேவில் நடைபெறும். பிப்ரவரி 2 அன்று மும்பையில் T20 தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும். இந்த 5 டி20களும் இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.
