KL Rahul: ரெஸ்ட் கேட்ட கேஎல் ராகுல்.. போய் விளையாடி பயிற்சி செய்யுங்க - கண்டிப்புடன் சொன்ன அகர்கர்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Kl Rahul: ரெஸ்ட் கேட்ட கேஎல் ராகுல்.. போய் விளையாடி பயிற்சி செய்யுங்க - கண்டிப்புடன் சொன்ன அகர்கர்

KL Rahul: ரெஸ்ட் கேட்ட கேஎல் ராகுல்.. போய் விளையாடி பயிற்சி செய்யுங்க - கண்டிப்புடன் சொன்ன அகர்கர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 11, 2025 03:01 PM IST

KL Rahul: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து பிரேக் கேட்ட கேஎல் ராகுல் கோரிக்கயை, இந்திய தேர்வுகுழுவின் தலைவர் அஜித் அகர்கர் நிராகரித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் கேஎல் ராகுலிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரெஸ்ட் கேட்ட கேஎல் ராகுல்.. போய் விளையாடி பயிற்சி செய்யுங்க - கண்டிப்புடன் சொன்ன அகர்கர்
ரெஸ்ட் கேட்ட கேஎல் ராகுல்.. போய் விளையாடி பயிற்சி செய்யுங்க - கண்டிப்புடன் சொன்ன அகர்கர் (AFP)

கேஎல் ராகுல் கோரிக்கை நிராகரிப்பு

இதைதத்தொடர்ந்து கேஎல் ராகுல் கோரிக்கையை இந்திய அணியின் தேர்வுக் குழு முதலில் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் திடீரென பிசிசிஐ தனது முடிவில் யூ-டர்ன் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கோரிக்கையை மறுபரிசீலனை செய்து பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ராகுலை தயார் செய்யுமாறு, அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அறிவிறுத்தியிருப்பதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிகின்றன.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் விளையாடினால் தான், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி காம்பினேஷனை இறுதி செய்ய முடியும் என தேர்வு குழு நினைப்பதாக சொல்லப்படுகிறது.

இந்திய டி20க்கான அணிக்கான சாய்ஸில் கேஎல் ராகுல் இல்லாத போதிலும், ஒரு நாள் அணிக்கான வீரர்களில் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள் லிஸ்டில் கேஎல் ராகுல் உள்ளார். 5 போட்டிகளில் 276 ரன்கள் அடித்து 30.66 சராசரி வைத்துள்ளார். ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சையும், பவுன்ஸர்களையும் சிறப்பாக எதிர்கொண்ட பேட் செய்தார்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருந்து வரும் கேஎள் ராகுலை, இங்கிலாந்துக்கு எதிரான வெள்ளை பந்து தொடரிலிருந்து ஓய்வு அளிக்க தேர்வுக்குழுவினர் ஆரம்பத்தில் முடிவு செய்தனராம். இருப்பினும், மேலும் பிப்ரவரியில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக அவர் பயிற்சியை பெறுவதற்கான வாய்ப்பாக இந்த தொடர் இருக்கும் என மறுபரிசீலனை செய்து பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.எல். ராகுலின் கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்தது ஏன்?

ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பருக்கான முதல் தேர்வாக ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை விட கேஎல் ராகுல் தான் முதல் சாய்ஸ் ஆக இருந்தார். இதற்காக அவருக்கு போதிய பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தியா தனது கடைசி ஒரு நாள் போட்டியாக கடந்த ஆண்டில் இலங்கைக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் விளையாடியது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் நீக்கப்பட்டாலும், 2023 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் அவரது செயல்திறன் சிறப்பாகவே இருந்தது.

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு அடுத்து சுமார் 6 மாத இடைவெளிக்கு பின் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா விளையாடவுள்ளது. இந்த தொடரில் கேஎல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் அணியில் இருக்க வேண்டும் என்பது தேர்வாளர்களின் விருப்பமாக உள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்து பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டிங் ஜொலிக்காத போதிலும், கணிசமான ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கேஎல் ராகுல் உள்ளார். இந்த தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த மூன்றாவது பேட்ஸ்மேனாக உள்ளார்.

விஜய் ஹசாரே டிராபியில் கர்நாடகாவின் போட்டிகளிலிருந்தும் ராகுல் ஓய்வு கோரினார். இதன் காலிறுதி வார இறுதியில் நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியாவில் தொடர் தோல்விக்குப் பிறகு, அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டியதன் அவசியத்தை தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் எடுத்துரைத்துள்ள நிலையில், கேஎல் ராகுல் ஓய்வு கோரிக்கை நிரகரிக்கப்பட்டதாக தெரிகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.