Deepak Chahar: ‘வருக, வருக!’-ஓராண்டுக்கு பின் இந்திய அணியில் இணையும் தீபக் சஹார்
Ind vs Aus T20I series: டி20 எஞ்சிய கிரிக்கெட் ஆட்டங்களில் தீபக் சேர்க்கப்பட்டிருப்பது அணிக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் மீதமுள்ள 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் தீபக் சஹார் சேர்க்கப்பட்டுள்ளார்.
தீபக் சாஹர் வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், உள்ளூர் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். 2019 ஆம் ஆண்டில், டி20 சர்வதேச போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் ஆனார்.
ஜனவரி 2020 இல், பங்களாதேஷுக்கு எதிராக ஏழு ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர், சாஹருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்டின் சிறந்த டி 20 செயல்திறன் விருதை வழங்கியது.
சாஹர் 1992 இல் உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் பிறந்தார். அவரது தந்தை லோகேந்திர சிங் சாஹர் இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றவர். அவரது தாயார் புஷ்பா சஹார் ஒரு இல்லத்தரசி. அவருக்கு பாலிவுட் திரைப்பட நடிகையான மால்தி சாஹர் என்ற சகோதரி இருக்கிறார்.
தொழிதிபர் ஜெயா பரத்வாஜை மணந்தார் தீபக். டி20 எஞ்சிய கிரிக்கெட் ஆட்டங்களில் தீபக் சேர்க்கப்பட்டிருப்பது அணிக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்தால் அவதிப்பட்டிருந்ததால் அவரால் விளையாட முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், ஓராண்டுக்கு பிறகு அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் சஹாசர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்